2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொமர்ஷல் வங்கியின் 'டைன் அன்ட் ஸ்மைல்' ஊக்குவிப்பு திட்டம்

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி 2015ம் ஆண்டுக்கான இரண்டாவது 'டைன் அன்ட் ஸ்மைல்' ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 58 உணவகங்களில் 8 வார காலத்திற்கும் அதிகமான காலப்பகுதியில் வங்கியின் வரவு மற்றும் செலவு அட்டையுள்ள வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிமிக்க கழிவுகளை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது.

இலங்கையின் முன்னணி ஹோட்டல்களில் உள்ள 22 உணவகங்கள், மற்றும் ஏனைய 36 பிரபல உணவகங்கள் இதில் இணைந்துள்ளன. வங்கியின் வரவு மற்றும் செலவு அட்டை வைத்திருப்பவர்களுக்கு 20 மற்றும் 30 வீத கழிவுகளை குறிப்பிட்ட காலப்பகுதியில் இவை வழங்க முன்வந்துள்ளன. ஆகஸ்ட் 10ல் தொடங்கிய இந்த ஊக்குவிப்பு காலம் அக்டோபர் 10ல் முடிவடையும் என்று வங்கி அறிவித்துள்ளது.

இதில்  இணைந்துள்ள உணவகங்கள் கிளப் பெந்தொட்டவின் பிரதான உணவகம், பார் பெவிலியன் உணவகம் (ஏர்ல்ஸ் ரீஜன்ஸி), கலிபோர்னியா கிரிள், கொபி ஷொப், கலதாரி ஹோட்டலின் பிளேவர்ஸ் அன்ட் ஷெஹர்சாதே, கேட்வே ஹோட்டலில் உள்ள பஸ் உணவகம், களுத்துறையில் உள்ள த சான்ட்ஸ் ஹோட்டலின் த வேவ்ஸ் பிரதான உணவகம், ஜெட்விங் பீச்சில் உள்ள தசேன்டஸ், பிளக் கோரல் மற்றும் த டெக் உணவகங்கள், ஜெட்விங் புளுவில் உள்ள த கிச்சன், சென்டர் பொயின்ட் மற்றும் கபே ஜே, ஜெட்விங் லெகூனில் உள்ள ஜெப்ரீஸ் பெவிலியன் மற்றும் புளுலெகூன், ஜெட்விங் லைட் ஹவுஸில் உள்ள சினமன்ட் ரூம் மற்றும் கார்டமெம் கபே, ஜெட்விங் ஸீ இல் உள்ள கபே ஸீ மற்றும் லெலாமா, ஜெட்விங் சென்ட் அன்ட்ரூஸிள் உள்ள ஓல்ட் கோர்ஸ் ரெஸ்ரூரண்ட், ஜெட்விங் யாலவில் உள்ள த டைனிங் ரூம், அம்ரிதா மசாலா டோக், பார்ஸ் கபே மைக்கலேன்ஜலோ, சைனா டோல், பிட்ஸ் மர்கோஸா யாழ்ப்பாணம், ஜெக் ட்ரீ, ஜேட் ரெஸ்ட்ரூரண்ட, கிங்கொகனட், கினாரி லூன்டாஓ, மகாராஜா பெலஸ், மிட்ஸிஸ் ஓக்ரே ரீஜன்ஸி, பொப்பி ஹனா ஜப்பானிய உணவகம், ரஜபோஜுன், ரெட் ஸ்நெபர்,  கொழும்பு கோர்ட் யார்டின் ஸ்கார்லெட் ரூம், செமாண்டு, செனானி ரெஸ்ட்ரூரண்ட் கண்டி, ஷியாம் ஹவுஸ், ஸ்ட்ரீட் 360 சன் ஷைன், TGI பிரைடேஸ், வோட்டா}; எட்ஜின் நான்கு உணவகங்கள் (போர்ட் வோக், போல்ஸ்டோ பை வொயிஸ், கின்ஸா எட் த எட்ஜ், த பேக்கரி) த மெங்கோ ட்ரீ, டில்கோ யாழ்ப்பாணம், சிங் டா ஓ, சுகிஜிஉயிச்சி, ஏர்பன் கிச்சன்
கொமர்ஷல் வங்கியின் கொம்டீல்; திட்டத்தின் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் அனுகூலங்களை மேலும் மேம்படுத்தும் வகையிலேயே இந்தத் திட்டங்களும் அமுல் செய்யப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள பிரதான சில்லறை விற்பனை நிலையங்களில் தனது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர் சலுகைகளை பெற்றுக் கொடுப்பதோடு கிரடிட் கார்ட் உரிமையாளர்களுக்கு வட்டியற்ற தவணைக் கொடுப்பனவு வசதிகளையும் வழங்குவதே கொம்டீல் திட்டமாகும். கொமர்ஷல் வங்கி கார்ட் உரிமையாளர்கள் விஸா மற்றும் மாஸ்டர் கார்ட் நிறுவனங்கள் நடத்தும் உலகளாவிய ஊக்குவிப்புத் திட்டங்களிலும் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெறுகின்றனர்.

கொமர்ஷல் வங்கி உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இடம்பிடித்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கியாகும். அது நாடு முழுவதும் 243 கிளைகளுடனும், 615 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. இதுவே நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியாகும். 2014ம் ஆண்டில் மிகச் சிறந்த தனியார் வர்த்தக முத்திரையாகவும் அது தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2015ல் பினான்ஸ் ஆசியா மற்றும் யுரோமணி என்பனவற்றால் இலங்கையின் மிகச்சிறந்த வங்கியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. கொமர்ஷல் வங்கி ஏனைய பல சர்வதேச சஞ்சிகைகள் மூலமாகவும் கடந்த பல ஆண்டுகளில் இலங்கையின் தலைசிறந்த வங்கி என தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு 2013 மற்றும் 2014ம் ஆணடுகளில் இலங்கையின் மிகச் சிறந்த பத்து பெரு நிறுவன குடியுரிமைகளில் ஒன்றாகவும் இலங்கை வர்த்தகச் சபையால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த பத்தாண்டுகளாக இலங்கையின் மிகவும் கௌரவத்துக்குரிய வங்கியாக LMD தர வரிசையில் தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. அத்தோடு கடந்த நான்கு வருடங்களாக இலங்கையின் ஒட்டு மொத்த கூட்டாண்மை நிறுவனங்களுள் மிகவும் கௌரவத்துக்குரிய இரண்டாவது நிறுவனம் என்ற இடத்தையும் தக்கவைத்துள்ளது. 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இதே LMD சஞ்சிகையின் தரவரிசையில் மிகவும் நேர்மையான நிறுவனங்களுள் முதலாவது இடத்தையும் தன்னகத்தே தக்கவைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .