2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 27

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1813: ட்ரெஸ்டன் யுத்தத்தில் பாரிய ஆஸ்திரிய, ரஷ்ய படைகளை பிரெஞ்சு மன்னன் நெப்போலியனின் படைகள் தோற்கடித்தன.

1859: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் பெற்றோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் முதலாவது வெற்றிகரமான வர்த்தக எண்ணெய் கிணறு அமைக்கப்படுவதற்கு இது  வழிவகுத்தது.

1986: பிரிட்டன் - ஸான்ஸிபார் நாடுகளுக்கிடையிலான யுததம் 45 நிமிடங்களில் முடிவுற்றது.

1916: ஆஸ்திரியா- ஹங்கேரிக்கு எதிராக ருமேனியா போர்ப் பிரகடனம் செய்தது.

1921: அரேபிய கிளர்ச்சியத் தலைவரின் மகனை ஈராக்கின் மன்னர் முதலாம் பைஸாலாக பிரிட்டன் நியமித்தது.

1971: சாட் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சதிப்புரட்சி முயற்சி தோல்வியுற்றது.

1979: இந்தியாவுக்கான பிரிட்டனின் கடைசி வைஸ்ராயும் சுதந்திர இந்தியாவின் முதல் ஆளுநர் நாயகமுமாக பணியாற்றிய மௌன்ட்பேட்டன் பிரபு அயர்லாந்தில் ஐ.ஆர்.ஏ. போராளிகளின் குண்டுத் தாக்குதலில் பலியானார்.

1991: சோவியத் யூனியனிடமிருந்து பிரிவதாக மோல்டோவா சுதந்திரப் பிரகடனம் செய்தது.

2003: செவ்வாய் கிரகம் பூமிக்கு  55,758,005 கிலோமீற்றர் தொலைவில் காணப்பட்டது. 60,000 வருடகாலத்தில் செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக நெருக்கமாக காணப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும்.

2006: அமெரிக்காவின் கென்டக்கியில் புளூகிராஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் தரையில் வீழ்ந்து நொருங்கியதில் 50பேரில் 49பேர் கொல்லப்பட்டனர்.

2006: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் நவாப் அக்பர் பக்டி இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .