2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அலிக்கம்பை பாலங்களை நிர்மாணித்துத் தருமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அலிக்கம்பைக் கிராமத்தில் சொறியனாற்றுப்பாலம் உட்பட மூன்று பாலங்களை  நிர்மாணிப்பதற்காக அடிக்கற்கள் நாட்டப்பட்டபோதிலும், இவற்றுக்கான நிர்மாண வேலைகள் கைவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

சொறியனாற்றுப்பாலம், தோணிக்கல் மேல் கண்டப்பாலம்;, தோணிக்கல் மேட்டாறு துரிசிப்பாலம் ஆகிய பாலங்கள் நிர்மாணிப்பதற்காக கடந்த டிசெம்பர் மாதம் அடிக்கற்கள் நாட்டப்பட்டன.

தற்போது சொறியனாற்றுப் பாலத்தின் நடுப்பகுதி இடிந்துவிழுந்து சேதமடைந்துள்ளதுடன், ஒருபக்க பாதுகாப்புச் சுவரும் இடிந்துள்ளது. இந்த நிலையில், இடிந்த நடுப்பகுதியில் தகரம் இடப்பட்டு தற்போது போக்குவரத்து மேற்கொள்ளப்படுகின்றது.

அக்கரைப்பற்றிலிருந்து அலிக்கம்பை, மாந்தோட்டம் ஆகிய கிராமங்களை இணைக்கும் பிரதான பாலமான சொறியனாற்றுப் பாலத்தினூடாக போக்குவரத்துச் செய்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதுடன், கனரக வாகனங்கள் பயணிக்க முடியாதுள்ளதாகவும் பொதுமக்கள் கூறினர்.

இது தொடர்பில் உரியவர்களுக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியபோதிலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பாலங்களை நிர்மாணித்துத் தருமாறும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த பாலங்களுக்கான நிர்மாண வேலை தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திடம் கேட்டபோது, 'இந்த பாலங்களுக்கான நிர்மாண வேலைகள் தற்போது முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .