2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்திய மீனவர்களினால் பல மில்லியன் நட்டம்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்களால் மாதகல், கட்டைக்காடு, தாளையடி மற்றும் தீவுப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் உபகரணங்கள் சேதமடைந்துள்ளது.

யாழ்.மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் சமாச சம்மேளனம், யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம், வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் ஆகிய இணைந்து நேற்று வியாழக்கிழமை (27) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தின் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களிலேயே மீனவர்களது வலைகள் மற்றும் உபகரணங்கள் இவ்வாறு சேதமடைந்துள்ளது.

'எமது எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வளங்களை அழித்து, மீன்களின் இனப்பெருக்கத்துக்கு பங்கம் விளைவித்து வரும் இந்திய இழுவைப் படகுகளை,   தாமதமின்றி தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கூறியிருந்தோம்.

அப்போதிருந்த சூழ்நிலைகள் காரணமாக அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. சமீப காலங்களில் இந்திய இழுவை படகுகளின் வருகை மிக வேகமாக அதிகரித்துள்ளன. எங்கள் கோரிக்கையை ஏற்று அதற்கு விரைவில்  நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியைக் கோருகின்றோம்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 'இது தொடர்பில் வடமாகாண, மாவட்ட அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் செப்ரெம்பர் மாதம் 4ஆம் திகதி யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை பணியகத்தில் நடைபெறவுள்ளது' என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .