2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

திருமணம் என்பது சமூக ஒழுக்கம் : அகமட் அப்கர்

Niroshini   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

குடும்பத்தை உருவாக்குவது திருமணமாகும். அந்தவகையில்,திருமணமென்பது சமூக ஒழுக்கமாகும் என காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் மகளிருக்கான மனை முகாமைத்துவமும் குடும்ப அபிவிருத்தியும் எனும் தலைப்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

குடும்பங்களை உருவாக்குவது திருமணமாகும். குடும்ப வாழ்க்கையை சீர்குலைக்க இன்று பல்வேறு நடவடிக்கைகள் பல்தேசிய கம்பணிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருமண வாழ்வை இல்லாமல் செய்து ஆணும் ஆணும் திருமணம், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்கின்ற ஒரு நடைமுறை சில நாடுகளில் இருப்பதை நாம் பார்க்கின்றோம்.

இதற்கு சில நாடுகள் அங்கீகாரம் கொடுத்துள்ளது. பேசுவதற்கு இது நன்றாக இருந்தாலும் இந்த நடைமுறையானது குடும்பத்தை உருவாக்கும் நடைமுறையல்ல.

குடும்பத்தை திட்டமிடும் வகையில் கணவனும் மனைவியும் நடந்து கொள்ள வேண்டும்.  அன்றாட வாழ்வில் குடும்ப திட்டமிடல் என்பது முக்கியமாகும். அப்போதுதான் செழிப்பும் அபிவிருத்தியும் அந்த குடும்பத்தில் ஏற்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .