2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தேசியப்பட்டியல் நியமனங்கள் உரிய நோக்கத்தை நிறைவு செய்வதாக அமைய வேண்டும் : பிர்தௌஸ்

Niroshini   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தேசியப்பட்டியல் நியமனங்கள் உரிய நோக்கத்தை நிறைவு செய்வதாக அமைய வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர்; பிர்தௌஸ் தெரிவித்துள்ளார்.

தேசியப்பட்டியல் நியமன விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசியப்பட்டியல் நியமனம் என்பது ஜனநாயகத்துக்கும் நல்லாட்சிக்கும் வலுச் சேர்த்தல் என்ற அடிப்படை நோக்கத்தை நிறைவு செய்வதாக அமைய வேண்டும்.

தேர்தலில் வெற்றி பெறாதவர்கள் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு உள்வாங்கப்படுவது முறையாகுமா? என்ற கேள்வி தற்போது பரவலாக எழுப்பப்படுகிறது.

எந்தவொரு விடயமும் அதன் அடிப்படை நோக்கத்தை நிறைவு செய்வதாக அமைகிறதா இல்லையா என்பதனை நோக்குவதில் இருந்தே நாம் எமது நிலைப்பாடுகளை வரையறுக்க வேண்டும்.

புத்திஜீவிகளும் நேர்மையானவர்களும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறமுடியாத சூழ்நிலைகளில் அவர்களை நாடாளுமன்றத்துக்கு உள்வாங்குவதே தேசியப்பட்டியல் முறையின் அடிப்படை நோக்கமாகும்.

அந்த வகையில், தேசியப்பட்டியல் நியமனங்கள் இந்த அடிப்படை நோக்கத்தை நிறைவு செய்வதாக பெரும்பாலும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரிய ஒரு வரலாற்று உண்மையாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .