2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தே.கா.க நாட்டின் அபிவிருத்திக்காக 15 வருடங்களாக செயற்பட்டுள்ளது: அதாஉல்லா

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா,ரீ.கே.றஹ்மத்துல்லா

கடந்த 15 வருடங்களாக தேசிய காங்கிரஸ் கட்சி நாட்டின் அபிவிருத்திக்காகவும் நிரந்தர சமாதனத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவுக்கும் முகமாக மண்ணை மகிழ வைக்கும் நீர் 'ஊற்று' எனும் தொனிப்பொருளில் வெள்ளிக்கிழமை (28) அக்கரைப்பற்றில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இந்தத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் தோற்கவில்லை. இதில் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் வெற்றியடைந்துள்ளார்கள். இந்த தோல்வி கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்த வழிவகுத்துள்ளது.

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் வழியை பின்பற்றி தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ள தேசிய காங்கிரஸ், ஒருபோதும் அழியாது. தேசிய காங்கிரஸ் அற்பச்சொற்ப சலுகைகளுக்காக ஒரு போதும் சோரம் போகாது.

அரசியல் அதிகாரத்துடன் இருந்நதால் தான் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்ற கொள்கைக்கு அப்பால் தேசிய காங்கிரஸ் செயற்படுகின்றது.

தேசிய காங்கிரஸையும் எங்களையும் தோற்கடிப்பதற்காக சில அரசியல் வாதிகள் பிரதேச வாதம் பேசி மக்களை திசை திருப்பிவுள்ளார்கள். ஆனால், நாங்கள் தோற்கவில்லை. நாடு தழுவிய ரீதியில் கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் பல அபிவிருத்திகளை செய்து சாதனை படைத்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் வாழும் சமூகங்களை ஒற்றுமைப்படுத்துவதற்கும் செயற்பட்டுள்ளது.

அமையப் போகின்ற ஜக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் தமிழ் பேரினவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி காணப்படுவதால், கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் எதிர்காலம் கோள்விக்குறியாகும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .