2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஓமந்தை சோதனை சாவடியில் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தம்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத், ரொமேஷ் மதுசங்க

வவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடியில் பல ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பதிவு நடவடிக்கைகள் இன்று (29) முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக ஓமந்தை பகுதியில் உள்ள இராணுவத்தினர் தெரிவித்தனர்.

சுமார் 20 ஆண்டு காலமாக சர்ச்சைக்குரிய சோதனைச்சாவடியாகவும் இறுதி யுத்த காலத்தில் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்த பலர், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போனதாக காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்ட பலரால் சுட்டிக்காட்டப்பட்ட இச் சோதனைசாவடியே இன்று முதல் பதிவு நடவடிக்கைகள் இன்றி திறந்து விடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் அமெரிக்க பிரதிநிதியொருவர் கொழும்பு வந்திருந்த சமயம் இவ் இச் சோதனை சாவடியில் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு மறுநாளில் இருந்து மீண்டும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, இச் சோதனை சாவடி அமைந்துள்ள பிரதேசம் பொது மக்களின் காணியாக காணப்படுவதை சுட்டிக்காட்டி காணி உரிமையாளர்களால் மனித உரிமை நிறுவனங்களில் மூலமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .