2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நிலையான அரசாங்கமே தேசிய அரசாங்கம்: இராதா

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கிதன், ஆ.ரமேஷ்

தேசிய அரசாங்கம் என்ற பதத்தை சிலர் தவறாக புரிந்துக்கொண்டு , அது குறித்து பொய்யான கருத்துக்குகளை வெளியிட்டு வருகின்றனர். தேசிய அரசாங்கம் என்பது அனைத்து சமுகங்களையும் ஒன்றிணைத்து நிலையான ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப-தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பலத்தை பெறாத நிலையிலே தேசிய அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேசிய அரசாங்கத்தின் நோக்கம் நிலையான ஓர் அரசாங்கத்தை அமைப்பதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தலவாக்கலையில் நேற்று (30) நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தேசிய அரசாங்கத்தின் ஊடாக நிலையான அரசாங்கத்தை அமைக்கும் போது, உலக நாடுகளின் முதலீடுகளின் மூலம் அபிவிருத்தி  நவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

மேலும், பங்குச்சந்தை வீழ்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடியும். நிலையான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அனைத்து சமுகங்களுக்கும் முன்னுரிமை வழங்கி தேசிய அரசாங்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .