2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்'

Niroshini   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.எஸ்.டீன்

எதிர்க் கட்சித் தலைமையை தமிழர் கூட்டமைப்புக்கு வழங்குமாறு முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதற்கு அரசு இணங்காத பட்சத்தில் முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறி சிறுபான்மை கூட்டமைப்பை உருவாக்கி செயற்படுவது பற்றி ஆலோசிக்க வேண்டும் என முஸ்லிம் தேசியவாதிகள் இயக்க செயலாளர் நாயகமும் முன்னாள்  அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

எதிர்க்கட்சித் தலைமைக்கு இரட்டைத்தலை சுதந்திரக்கட்சிக்கு இடமளிக்காமல்,தமிழர் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைமையை வழங்க முஸ்லிம் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அது முடியாமல் போகும் பட்சத்தில் முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு ஐக்கிய தேசிய முன்னணியுடன் சேர்த்து கூட்டாட்சி ஒன்றை அமைக்க தமிழர் கூட்டமைப்பு தயாராக இருக்காமல் போனது துரதிர்ஷ்டவசமான நிகழ்வாகும்.

தேசிய அரசாங்கம் என்ற பெயரில் தேடிக்கொள்ளப்போவது தீராத தலைவலியைத்தான் என்பதைத் தெரிந்து கொள்ள பிரதமருக்கு அதிக காலம் தேவைப்படாது.

சுதந்திரக் கட்சி ஆடப் போகின்ற நாடகம் ஜனாதிபதியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக் கூடியதாகவே அமையும்.

இதைவிட தமிழர் கூட்டமைப்போடு தேசிய அரசாங்கம் என்றில்லாமல் ஐக்கிய தேசிய முன்னணி ஒரு கூட்டாட்சியை ஜனாதிபதியின் துணையோடு நடத்தவும் அந்தக் கூட்டாட்சியை எதிர்க் கட்சியிலிருந்து சுதந்திரக் கட்சி வழி நடத்தவும் முடியுமாக இருந்தால், நாடு முன்னேற்றத்தை நோக்கி வீறுநடைபோட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X