2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வவுனியா நகரசபைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா நகர்ப் பகுதியில் நகரசபைக்கு சொந்தமான பல முக்கிய இடங்கள் தனியாரினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வரியிறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா நகரசபைக்கு சொந்தமான பல இடங்கள் இன்று தனியாரினால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு நகரசபையின் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காது உடந்தையாக செயற்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கந்தசாமி கோவில் வீதியில் மலசலகூடம் அமைந்திருந்த பகுதி, ஹொரவப்பொத்தான பகுதியில் மலசலகூடம் அமைந்திருந்த பகுதி மற்றும் தர்மலிங்கம் வீதியின் தொடக்கத்தில் வாகன தரிப்பித்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடம் என்பன உட்பட பல இடங்கள் தனியாரினால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இவையனைத்தும் செல்வந்தர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையினால் நகரசபை நடவடிக்கை எடுக்காது உள்ளது. எனவே, இது தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபையோ அல்லது மாகாண உள்ளூராட்சி அமைச்சராக உள்ள முதலமைச்சரோ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வவுனியா நகரசபைக்கு சொந்தமான பல மாயனங்களும் சிலரால் அதிகாரங்களை பிரயோகித்து கட்டடங்கள் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அதற்கு நகரசபை மௌனம் காப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .