2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'வீ பிரசன்ஸா' - ஸ்தோத்திர இசையுடன் ஒரு தெய்வீக மாலை

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தஹம் பஹன'வின் 'வீ பிரசன்ஸா' ஆன்மீக இசை நிகழ்ச்சி, செப்டெம்பர் 1ம் திகதி, கொழும்பு  விகாரமகாதேவி  திறந்த வெளி அரங்கில் மாலை 5.00 மணி முதல் நடைபெறவுள்ளது. ஆன்மீகம் மூலம் நற்செய்தியைப் பரப்பவுள்ள இந்த இசை நிகழ்வில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

1990களின் ஆரம்பத்தில் நிறுவப்பட்ட ஒரு ஆன்மீக இயக்கமான 'தஹம் பஹன' இசை மூலம் மக்கள் மத்தியில் நற்செய்தியை பரப்பி வருகிறது. சகோதரர் அன்டன் சார்லஸ் தோமஸால் நிறுவப்பட்ட இந்த இயக்கம், உலகில் ஒவ்வொரு மதங்களினதும் மார்க்கப் போதனைகள், தர்மத்தின் அடிப்படையில் இயங்குவதான நம்பிக்கையை கொண்டுள்ளது. 'தஹம் பஹன' உலகம் முழுவதும் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் கொண்டுசெல்ல இசையை மூலக்கருவியாக பயன்படுத்துகிறது. கலாசார தடைகளை தாண்டி அனைவராலும் விரும்பப்படும் இசை, பல நூற்றாண்டுகளாக ஒரே நேரத்தில் பல மதங்களையும் இணைக்கும் சிறந்த ஊடகமாகத் திகழ்கிறது. 

முதல் பாடல் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 'தஹம் பஹன' இயக்கம் நற்செய்தியை கொண்டு செல்லும் முகமாக இசையமைத்த பல பாடல் ஆல்பங்களை வெளியிட்டுள்ளது. ஸ்டான்லி பீரிஸ்,  சுரேஷ் மல்லியத்த, ரூகாந்த குணதிலக, ரோஹன வீரசிங்க, ரங்கன தஸநாயக்க,  மற்றும் லெஸ்லி தோமஸ் உள்ளிட்ட இலங்கையின் சிறந்த இசைக்கலைஞர்களின் கூட்டிணைவில், பலரதும் ஆதரவை வென்ற நூற்றுக்கும் மேற்பட்ட கிரிஸ்தவ பாடல்கள் வெளிடப்பட்டுள்ளன.

'தஹம் பஹனவின் நோக்கம், ஆன்மீக வல்லமை உலகை ஆளும் நிலையை ஏற்படுத்துவதுடன், இலங்கை மற்றும் உலகம் முழுவதும் தர்மத்தை நிலை நாட்டுவதாகும்' என்று தஹம் பஹனவின் நிறுவனர் சகோதரர் சார்லஸ் தாமஸ் கூறினார். 'தஹம் பஹன' இனம், மதம், மொழி, வர்க்க அல்லது ஜாதி வேறுபாடுகள் இல்லாமல், ஒற்றுமை, அன்பு, அமைதி என்பவற்றால் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இயக்கமாக அனைவரையும் ஒன்றிணைக்கிறது. நாம் இசை மூலம் ஆன்மீக மதிப்புள்ள செய்தியை பரப்பி வெவ்வேறு மதங்களையும் சேர்ந்த மக்களை ஐக்கியப்படுத்துவதில் வெற்றிபெற்றுள்ளோம். அந்தவகையில்  இந்த ஆண்டும் 'வீ பிரசன்ஸா' ஆன்மீக இசைநிகழ்வு மூலம் மீண்டும் அந்தப் பணியை நாம் நிறைவேற்ற உள்ளோம்' என்று கூறினார்.

'வீ பிரசன்ஸா' ஓர் இசை நிகழ்ச்சி மட்டுமல்ல. அதுவொரு ஆன்மீக உடற்பயிற்சியுமாகும். இயேசு கிறிஸ்துவின் போதனைகளை, நல்ல செய்திகளை, மறைக்கப்பட்ட உண்மைகளை பல்வேறு மட்டங்களிலும் தெளிவுபடுத்துகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், மத குருமார்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள்,  கல்வியாளர்கள், பிரமுகர்கள், நீதித்துறை மருத்துவதுறை வங்கித்துறை உறுப்பினர்கள், வணிக பிரதிநிதிகள் மற்றும் ஊடகத்துறையை சார்ந்தவர்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த ஆண்டு நிகழ்ச்சியில் சகோதரர் சார்லஸ் தாமஸ், லெஸ்லி தாமஸ் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன், நாட்டின் புகழ்பெற்ற சுரேஷ் மல்லியத்தவின் இசைக்குழு பின்னணி இசை வழங்கவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .