2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெலே சுதா வழக்கு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர் என்று கூறப்படும் வெலே சுதாவுக்கு எதிரான வழக்கு செப்டெம்பர் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரிதி பத்மன் சுரசேனவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரான வெலே சுதா, 7.05 கிராம் ஹெரோய்ன் விற்பனை செய்ததாக முறைப்பாட்டாளர் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

இரசாயன பகுப்பாளர் அறிக்கையின் பிரகாரம் ஹெரோய்ன் 7.05 கிராம் என்று கூறப்பட்ட போதிலும் வெலே சுதா கைதுசெய்யப்படும் சந்தர்ப்பத்தில் அவரிடம் 84 கிராம் இருந்ததாகவும் 1 கிராமில் 200 பக்கற்றுகள் வியாபாரத்துக்கு தயாராக இருந்ததாகவும் அரச சட்டத்தரணி, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.   

எனினும், பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு போதியளவான சாட்சிகள் இல்லையென்று பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார். இதனையடுத்தே வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .