2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எதிர்க்கட்சி தலைவர் தெரிவு தாமதமாகும், த.தே.கூ.வுக்கு பதவி

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்குள் இழுபறி நிலைமை காணப்படுவதால் எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பது ஒத்திவைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

புதிய நாடாளுமன்றத்தின் இன்றைய கன்னியமர்வின் போது, எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படமாட்டார் என்றும், சபாநாயகரான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவரும், பிரதி சபாநாயகராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரும் நியமிக்கப்படலாம் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கட்சியை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து அறுவரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளமையால் எதிர்க் கட்சித் தலைவர் தெரிவு இன்றையதினம் இடம்பெறாது என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, எஸ்.பி. திஸாநாயக்க, சரத் அமுனுகம, துமிந்த திஸாநாயக்க, குமார் வெல்கம மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோரின் பெயர்களே பிரேரிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .