2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இசிப்பத்தன எதிர் சென். தோமஸ்

Gopikrishna Kanagalingam   / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

18 வயதுக்குட்பட்டவர்களுக்கான றக்பி கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு, கொழும்பு இசிப்பத்தன கல்லூரியும் கல்கிஸை சென். தோமஸ் கல்லூரியும் மோதவுள்ளன. கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற அரையிறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்றே, இவ்விரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன.

இசிப்பத்தன கல்லூரிக்கும் கண்டி தர்மராஜ கல்லூரிக்குமிடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டியில், இசிப்பத்தன கல்லூரி அணி 20-14 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

கல்கிஸை சென். தோமஸ் கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி சென். பீற்றர்ஸ் கல்லூரிக்குமிடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், சென். தோமஸ் கல்லூரி அணி 10-3 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

இப்போட்டியின் முதலாவது பாதியில் புள்ளிகளெவையும் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்காத நிலையில், விறுவிறுப்பான போட்டியாக இப்போட்டி அமைந்தது.

இதேவேளை, இத்தொடரின் ஷீல்ட் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டிக்கு வித்தியார்த கல்லூரியும் தேர்ஸ்டன் கல்லூரியும், பொவ்ள் கிண்ணத்துக்கான போட்டிகளில் திரித்துவக் கல்லூரியும் கிங்ஸ்வூட் கல்லூரியும் பிளேட் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டிக்கு வெஸ்லி கல்லூரியும் விஞ்ஞானக் கல்லூரியும் தகுதிபெற்றன.

இறுதிப் பொட்டிகள் அனைத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை, கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .