2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சுப்பர் 8 சுற்றில் சென்.மேரிஸ், சென்.ஜோசப்

Gopikrishna Kanagalingam   / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஸ்ரீ. கோபிநாத்

நெற்கொழு கழுகுகள் வி.க நடாத்தும் வடமாகாண ரீதியான கால்பந்தாட்டத் தொடரில்; புதனன்று நடந்த போட்டியில் யாழ். சென். மேரிஸ், மன்னார் சென்.ஜோசப் ஆகிய அணிகள் சுப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. 

முதலாவது போட்டியாக இடம்பெற்ற சென். மேரிஸ் வி.க எதிர் வல்வை வி.க போட்டியில், ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்தில், சென். மேரிஸ் வீரர் நிதர்சன் ஒரு கோலினை அடித்தார். 

பெறப்பட்ட கோலினைத் தொடர்ந்து, கோலினைப் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்குடன் வல்வை வி.கழகமும், மேலும் கோல்களைப் பெற வேண்டும் என சென். மேரிஸ{ம் ஆடிய போதிலும், சந்தர்ப்பங்கள் அமைந்தும் மேலதிக கோல் எதனையும் பெற முடியவில்லை.

எனவே, போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் சென்.மேரிஸ் அணி வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதுடன் ஒரு கோலினையும் அடித்த நிதர்சன், ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். 

இரண்டாவது போட்டியாக இடம்பெற்ற சென். ஜோசப் வி.க எதிர் வதிரி பொம்மேர்ஸ் வி.க போட்டியில், ஆட்டத்தின் முதற் பாதியில் இரு அணிகளாலும் கோல் எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இரண்டாவது பாதி ஆட்டம் விறுவிறுப்பாகத் தொடர, இரண்டாவது பாதியின் 07 ஆவது நிமிடத்தில், சென். ஜோசப் வீரர் ரெக்சன் முதலாவது கோலினை அடிக்க, தொடர்ந்து 17 ஆவது நிமிடத்தில் நட்சத்திர வீரர் டிங்கோணி ஒரு கோலினை பெற்றார். ஆட்டத்தில் 02 நிமிடங்கள் இருக்கும் போது, பொம்மேர்ஸ் அணியினர் போதிய வெளிச்சம் இன்மை என கூற போட்டி நிறுத்தப்பட்டது. எனினும் போட்டி நடுவர்களின் அறிக்கையில் மிகுதி நேர விளையாட்டினை தொடர போதுமான வெளிச்சம் காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டதனைத் தொடர்ந்து, சென்.ஜோசப் வெற்றி பெற்றதாக போட்டி ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .