2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அரச நியமனங்களை புதியக்குழுவே தீர்மானிக்கும்: ஜனாதிபதி

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாங்கள் கடந்துவந்த கடந்த 8 மாத காலங்களில் நாட்டின் அரசியலில் நல்ல அனுபவம் இருக்கின்றது. அந்த அனுபவத்தின் அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நான் கலந்துரையாடினேன். எதிர் காலங்கில் அரச நியமனங்கள் வழங்குவது தொடர்பில் புதியக் குழுவே தீர்மானிக்கும் என்று ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெரிவித்தார்.

புதிய அமைச்சரவை பதவியேற்கும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அந்த வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

என்னை பொது வேட்பாளராக நிறுத்தியதன் பின்னர் எனக்கு ஆதரவளித்த பல கட்சிகள் இருக்கின்றன. அக்கட்சிகள் வழங்கிய மக்கள் ஆணையின் பிரகாரம் செயற்பட்ட 100 நாட்கள் தற்காலிக அரசாங்கத்தில், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடமே இருந்தது.

அந்த 100 நாட்களில் முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத்திட்ட யோசனை மற்றும் 19ஆவது திருத்தத்துக்கு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஆதரவளித்தது.

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்காக தற்காலிக அரசாங்கத்தின் போது சில பிரயோசனங்கள் கிடைத்தன. தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்காக அழைப்பு விடுத்த போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளித்து அதில் இணைந்துகொண்டது.

எங்களுடைய அனுபவத்தின் பிரகாரம் கடந்த 10 வருடங்களில் அமைச்சரவையை நியமிக்கும் போதெல்லாம் பல்வேறான அனுபவங்களை பெற்றிருந்தோம். 2010 ஆம் ஆண்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றிருந்த போதிலும் அமைச்சரவை தெரிவு செய்யும் போது பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தோம்.

அதேபோல பிரதான கட்சிகள் இரண்டு இணைந்து அரசாங்கத்தை உருவாக்கும் போது பல்வேறான பிரச்சினைகள் ஏற்படும் என்பதனை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

அமைச்சர்கள், இராஜங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கான விடயதானங்களை தெரிவு செய்யும் போது ஏற்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு நல்கியோருக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்.
அமைச்சு பொறுப்புகள் கிடைத்தோர், அவர்களுக்கு கிடைத்த நிறுவனங்கள் பற்றியும் கிடைக்காதவர்கள் கிடைக்காத விடயதானங்கள் பற்றியும் சிந்திப்பர்.

கிடைத்தவர்கள், கிடைக்காதவர்களை சந்தோஷப்படுத்துவது கடினம். எனினும், நாடாளுமன்றத்தில் இருக்கின்ற 225 பேரும் பெரும்பான்மை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும்.

அமைச்சு பதவிகளில் மட்டுமன்றி மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர், நாடாளுமன்ற குழு மற்றும் அதனோடு இணைந்த நிறுவனங்கள் பலவற்றுடன் இணைந்து செயற்படவேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதியொதுக்கீட்டின் போது சகலருக்கும் சமமான முறையில் நிதியொதுக்கீடு செய்யப்படும்.

அரசியல்வாதிகள் எதனையும் இரகசியமாக செய்வதற்கு முன்வரக்கூடாது. இரகசியமாக செய்தாலும் அது மக்களின் கைகளுக்கு தெளிவாக சென்றுவிடும். இரகசியமாக செய்தாலும் பிரசித்தமாக செய்தாலும் அவை மக்களிடத்தில் சென்றுவிடும்.

நானும் பிரதமரும் இணைந்து பொதுக்குழுவை நியமித்து அரச நிறுவனங்களுக்கு தகுதியான நபர்களை நியமிப்போம். அமைச்சர்களும் அதிகாரிகளின் பெயர்களை தரலாம். நான்கு வருடங்களுக்கு நாடாளுமன்றத்தை கலைக்கமுடியாது. இந்த அமைச்சரவைதான் அந்த நான்குவருடங்களுக்கும் இருக்கும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X