2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வயல் விழாவும் வீட்டுத்தோட்ட செய்கை பார்வையும்

Gavitha   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (4) மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட வஞ்சியன் குளம் கிராமத்தில், வயல் விழா இடம் பெற்றது. அத்தோடு, கட்கிடந்த குளம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வீட்டுத்தோட்ட செய்கைகளும் பார்வையிடப்பட்டன.

இதன்போது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும்  விவசாயிகளுக்கு மாற்று செய்கையை ஊக்குவிக்கும் வகையிலும் மன்னார் விவசாய திணைக்களத்தினால், வஞ்சியன் குளம் கிராமத்தில் பயிரிடப்பட்ட தானியங்களில் ஒன்றான பயறு அறுவடையை, வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து கட்கிடந்த குளம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வீட்டுத் தோட்ட செய்கைகளையும் வடமாகாண விவசாய அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டதோடு, குறித்த தோட்டத்தில் கிடைக்கின்ற உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .