2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கூட்டுறவு அதிகாரிகளுக்கு பயிற்சி பட்டறை

Niroshini   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்கு மாகாணத்தில் கூட்டுறவுத் துறையை விருத்தி செய்து செயற்பாட்டு அறிக்கை தயாரிப்பது தொடர்பாக கூட்டுறவு அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் பயிற்சிப் பட்டறை இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அலுவலக கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
 

மட்டக்களப்பு மாவட்ட  கூட்டுறவுத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ்.கிருபைராசசிங்கம் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம்,அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ரி.தங்கவேல், கூட்டுறவுத் திணைக்கள் மாகாணப் பணிப்பாளர் கே.திவாகரசர்மா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டுறவுச் செயற்பாட்டை அதிகரிக்கச் செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் முதற் கட்டமாக இப்பயிற்சிப் பட்டறை இடம்பெறுகின்றது.
 
மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் போது கூட்டுறவுச் சங்கங்களினால் முன்மொழியப்பட்ட பலவீனங்கள், பரிந்துரைகள், குறைபாடுகள் என்பற்றை கூட்டுறவு அதிகாரிகளுடன் ஆராய்ந்து இது தொடர்பில் கூட்டுறவு அதிகாரிகள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தி கூட்டுறவுத்துறையில் மாற்றத்தை கொண்டு வருவதே இப்பயிற்சிப் பட்டறையின் நோக்கமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .