2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மன்னாரில் மீள்ளாய்வு கூட்டம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 04 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மார்க் ஆனந்த்

வட மாகாண வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மன்னாரிலுள்ள வட மாகாண வீதிகள் அபிவிருத்திக்கான அமைச்சரின் உப அலுவலகத்தில் நடைபெற்றது.

வட மாகாண  போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,
 மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் ஜே.ஜே. பெலிசியன், அமைச்சின் செயலாளர் எஸ்.சுத்திய சீலன், அமைச்சின் பிரதம கணக்காளர்  திருமதி.ஆனந்த கிருஸ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது யாழ் மாவட்டத்தில் 36 மில்லின் ரூபாய் செலவில் 20 அபிவிருத்தி திட்டங்களும் மன்னாரில் 25 மில்லியன் ரூபாய் செலவில் 11 அபிவிருத்தி திட்டங்களும் வவுனியா மாவட்டத்தில் 25 மில்லியன் ரூபாய் செலவில் 11 திட்டங்களும் கிளிநோச்சி மாவட்டத்தில் 25 மில்லின் ரூபாய் செலவில் 10 அபிவிருத்தி திட்டங்களும் மூல்லைத்தீவு மாவட்டத்தில் 25 மில்லின் ரூபாய் செலவில் 10 அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கபட்ட நிலையில் அவை தொடர்பாக செய்து முடிக்கபட்டவை மற்றும் செய்யபடவேண்டியவை தொடர்பாக ஆராயப்பட்டன.

மேலும்,மன்னார் முருங்கன் பகுதியில் 5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள பஸ் நிலையம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .