2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புதியவகை Nexus திறன்பேசிகள், டப்லெட்களை கூகிளால் அறிமுகம்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்பிள் முன்னிலை வகிக்கும் திறன்பேசி சந்தையில், தமது அடையாளத்தை பதிக்கும் பொருட்டு புதிய முயற்சியாக செவ்வாய்க்கிழமை (29) கூகிள் ஆனது தனது புதிய வகை Nexus திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதல்வார இறுதி விற்பனையில் புதிய வகை ஐபோன்கள் சாதனை படைத்துள்ளதாக அப்பிள் அறிவித்து மறு தினமே Nexus 6P மற்றும் Nexus 5X ஆகிய புதிய திறன்பேசிகள் கூகிளால் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் Nexus 5X இன் 16 GB திறன்பேசி இன் விலை 379 அமெரிக்க டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, Nexus 6P இன் 32 GB இன் விலை 499 அமெரிக்க டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, யுடியூப்பில் நேரலை செய்யப்பட்ட நிகழ்வில் கூகிள் தெரிவித்துள்ளது.

அப்பிளின் புதிய 6S மற்றும் 6S பிளஸ் வகை திறன்பேசிகள், இரண்டு வருட இணைப்பு வழங்குனர் ஒப்பந்தத்துடன் முறையே 199 அமெரிக்க டொலர்கள், 299 அமெரிக்க டொலர்களுக்கு கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐபோனோ அல்லது ஐபாட் போன்றோ Nexus சாதனங்கள் அதிகமான விற்பனையைக் கொண்டிருக்காவிட்டாலும், இவற்றிலேயே திறன்பேசிகளில் இறுதியாக வந்த புதிய மென்பொருள், வன்பொருள் தொழில்நுட்பங்கள் காணப்படுகின்றன.

இந்த வெளியீட்டுடன், முற்று முழுதாக கூகிளின் அன்றொயிட் இயங்குதளத்தில் இயங்கக்கூடிய டப்லெட்டையும் கூகிள் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள Nexus பாவனையாளர்களுக்கு புதிய வகை அன்றோயிட் இயங்குதளம் மார்ஷ்மலோ (Marshmallow) , அடுத்த வாரம் கிடைக்கவுள்ளது. இணைய உலாவியில் இருந்து திறன்பேசி செயலிகளுக்கு மாறி  வரும் பயனர்கள் காரணமாக அன்றொயிட் இயங்குதளத்தின் மூலமே கூகிளானது பிரதான வருமானமானத்தை இணைய விளம்பரத்தின் மூலம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

இதில், தென்கொரியாவின் LG Electronics நிறுவனத்தால் Nexus 5X  திறன்பேசி தயாரிக்கப்பட்டுள்ளதோடு, சீனாவின் Huawei Technologies நிறுவனத்தால் Nexus 6P திறன்பேசி தயாரிக்கப்பட்டுள்ளது.

இரு திறன்பேசிகளின் பின்புறத்திலும் கூகிளின் புதிய விரல் அடையாளமான Nexus Imprint உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, ஒரு தொடுகையின் மூலம் கட்டணங்களை செலுத்தும் செயலியான Android Pay இல் இலகுவாக கட்டணங்களை அனுமதிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய திறன்பேசிகளுக்கான முற்பதிவுகளை ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலுள்ள கூகிள் வைப்பகங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புதிதாக வெளியிடப்பட்டுள்ள Pixel C 32 GB டப்லெட் இன் விலை 499 அமெரிக்க டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, இதனோடு இணைத்து பாவிக்கக்கூடிய தட்டச்சு பலகையின் விலை 149 அமெரிக்க டொலர்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தவிர, மீளவடிவமைக்கப்பட்ட தொலைக்காட்சிகளுக்கான இணைய நேரலை சாதமான Chromecast சாதனத்தையும், ஒலிபெருக்கிகளுடன் இணைத்து ஒலியை மட்டும் நேரலை செய்யக்கூடிய 35 அமெரிக்க டொலர் பெறுமதியான Chromecast Audio சாதனத்தையும் கூகிள் அறிமுகம் செய்திருந்தது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .