2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தண்ணீரூற்று முஸ்லிம் மகாவித்தியாலயத்துக்கு அன்பளிப்பு

Gavitha   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட தண்ணீரூற்று முஸ்லிம் மகாவித்தியாலயத்துக்கு ஒரு தொகுதி கதிரைகள் மற்றும் நூலகத்துக்கான தளபாடங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக,  பாடசாலையின் அதிபர் ஏ.சி.ரியாஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் யாசின் ஜவாஹிர் (ஜனோபர்) ஆகிய இருவருமே, குறித்த தளபாடங்களை அன்பளிப்பு செய்துள்ளனர்.

இரு மாகாண சபை உறுப்பினர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே, மாகாண சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த தளபாடங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன், பாடசாலையின் நூலகத்துக்கு 50ஆயிரம் ரூபாய்  பெறுமதிமிக்க தளபாடங்களையும் வடமாகாண சபை உறுப்பினர் யாசின் ஜவாஹிர் (ஜனோபர்) 1 இலட்சத்து 20ஆயிரம் ரூபாய்  பெறுமதிமிக்க 140 பிளாஸ்ட்ரிக் கதிரைகளும் அன்பளிப்பு செய்துள்ளனர் என்று அதிபர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .