2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உலக வங்கி பிரதிநிதி மட்டு.க்கு விஜயம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 07 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பிரன்கோய்ஸ் குளோற்றிஸ் மற்றும் உலக வங்கியின் கிராமிய அபிவிருத்தி நிபுணத்துவ ஆலோசகர் மனோகரன் ஆகியோர் மட்டக்களப்புக்கு இன்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

உலக வங்கயின் நிதி உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக  நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம்,எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக அறிந்துகொள்ளும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடானான சந்திப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையில் நடைபெற்றது.

கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்த்தீன் தலைமையில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தினை அதிகரிக்கக்கூடிய விசேட வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் வாழைச்சேனை பிரதேசங்களில் சுற்றுலாத் துறை அபிவிருத்திக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை,  கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட திகிலிவெட்டை கிராமத்துக்கு சென்று அப்பகுதி மக்களுடன் விசேட சந்திப்பு ஒன்றினையும் மேற்கொண்டனர்.

இதன்போது மக்கள் தங்களது குறைபாடுகளான வீதி புனரமைப்பு, மருத்துவ வசதிக்கான கட்டட வசதி,புலிபாய்ந்த கல் பாலம் புனரமைப்பு,குடி நீர்,வீடு போன்ற பல்வேறு தேவைகளை நிறைவேற்றித் தருமாறு பிரதிநிதிகளிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .