2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இந்தியாவின் உதவியுடன் மலையகத்தில் வீடமைப்புத் திட்டம்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 07 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில்  மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புக்குள்ளாகக் கூடும் என இனங்காணப்பட்டுள்ள 5ஆயிரம் குடும்பங்களுக்கு இந்தியாவின் உதவியுடன் வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மலையகத்தில் 4,000 வீடுகளை அமைத்துக்கொடுக்க இந்தியா, இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், அனர்த்தங்களை எதிர்கோக்கியுள்ள குடும்பங்களுக்கு அவ்வீடுகளை அமைத்துக்கொடுப்பது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டளவில் வீடுகளை அமைத்துக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .