2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

56 குடியிருப்பாளர்களுக்கும் காணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

Sudharshini   / 2015 ஒக்டோபர் 07 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

'நுவரெலியா பொது விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யும்போது, நுவரெலியா குதிரைப்பந்தய திடலில் கடந்த 100 வருடங்களுக்கு மேலாக குடியிருக்கும் 56 குடியிருப்பாளர்களுக்கு, காணிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் அவர்கள் மேலும் கூறியதாவது,

'நுவரெலியா பொது விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல்  நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு மைதானத்தை சர்வதேச தரம் வாய்ந்த மைதானமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு அரசாங்கத்திடம் உள்ளது.

தற்போது, மைதானத்தை அபிவிருத்தி செய்வது, அதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு நிதி வழங்குவதற்கு இரண்டு நாடுகள் முன்வந்துள்ளன.  மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு முன்பாக மைதானத்தின் ஒரு பகுதியில் இருக்கின்ற குடியிருப்பாளர்களுக்கு உரிய காணியைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.

எனவே, இவ்விடயம் தொடர்பாக இந்தப் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற   அமைச்சர் பழனி திகாம்பரம், நவீன் திசாநாயக்க, இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் உட்பட அரசியல் பிரமுகர்களை அழைத்து விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளோம்.

அதன் பிறகு இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு மைதானம் அபிவிருத்தி செய்யப்படும்' என்றனர்.

'நுவரெலியாவின் காலநிலையை கருத்தில் கொண்டும் சுற்றுலா தளமாக நுவரெலியா விளங்குகின்ற காரணத்தாலுமே இந்த மைதானத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதன் மூலம் சுற்றுலாத்துறையையும் அபிவிருத்தி செய்ய முடியும்' எனவும் அவர்கள் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .