2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்று வெளியாகவுள்ள சமாதானத்துக்கான நொபெல் பரிசு வெற்றியாளரின் பெயர்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகவுயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் சமாதானத்துக்கான நொபெல் பரிசின் இவ்வாண்டுக்கான விருது, இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இந்த விருதை வழங்கும் நோர்வேயின் நொபெல் செயற்குழு, இந்த விருதுக்காகப் பரிந்துரைக்கப்படுவோரின் விவரங்களை, 50 வருடங்களுக்கு வெளியிடுவதில்லை. இதன் காரணமாக, இவ்வாண்டில் குறுகிய பட்டியலில் இடம்பெற்றிருப்போரின் விவரங்கள், 2065ஆம் ஆண்டே வெளியிடப்படும்.

எனினும், இவ்வாண்டுக்கான விருதுக்கு 68 நிறுவனங்களும் 205 தனிநபர்களுமமாக 273 போட்டியாளர்கள் காணப்படுவதாக, அவ்வமைப்புத் தெரிவிக்கின்றது.

எனினும், பல்வேறுபட்ட ஊகங்களின் அடிப்படையில், ஐரோப்பாவில் ஏற்பட்ட அகதிகள் பிரச்சினையைச் சிறப்பாகக் கையாண்டமைக்காக, ஜேர்மனியின் சான்செலரான (அரசாங்கத் தலைவர்) அங்கெலா மேர்க்கெல், இவ்விருதை வெற்றிபெறுவதற்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கு அடுத்ததாக, அண்மைக்காலமாக வரவேற்பைப் பெற்றுவரும் பாப்பரசர் பிரான்ஸிஸூக்கு வாய்ப்புகள் இருப்பதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அவரது அமெரிக்க பயணம், அவருக்கான வாய்ப்புகளை அதிகரித்திருக்கலாம் என எதிர்வுகூறப்படுகிறது.

கொலம்பியாவில் சமாதானம் பற்றிய நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கும் கொலம்பிய ஜனாதிபதி ஜுவான் மானுவேன் சந்தொஸ், ஆயுதக்குழுவின் தலைவரான திமோலியன் ஜிமெனெஸ் ஆகியோருக்கும் கணிசமான வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுவதோடு, ரஷ்யாவின் சுயாதீனப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் டிமிற்ரி முரதோவ், ஜப்பானின் அரசியலமைப்பிலுள்ள போருக்கெதிரான சரத்தொன்றைப் பாதுகாக்கப் போரிடும் குழுவொன்று, ஜப்பானிய பௌத்த குழுவான சொகா கக்காயினை நிறுவிய டெய்சகு இகெடா, அமெரிக்காவின் உளவுத் தகவல்களை வெளியிட்ட எட்வேர்ட் ஸ்னோடன், சவூதி அரேபியாவின் மனித உரிமைகள் தொடர்பாகவும் மதங்களுக்கெதிராகவும் வலைப் பதிவுகளை எழுதி, சிறையிலடைக்கப்பட்டுள்ள எழுத்தாளரான றெய்ப் படவி ஆகியோருக்கும் வாய்ப்புகள் இருப்பதாக, எதிர்வுகூறப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X