2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'மளகிய அத்தோ' நூலை பிரதி செய்தவருக்கு 28 அன்று தீர்ப்பு

Gavitha   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திரவின் புகழ்பெற்ற 'மளகிய அத்தோ' எனும் நாவலை பிரதி செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு எதிரான தீர்ப்பை, எதிர்வரும் 28ஆம் திகதி வழங்குவதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலாபிட்டிய, புதன்கிழமை (07) அறிவித்தார்.

மறைந்த பேராசிரியரின் மனைவியான லலிதா சரத்சந்திரவின் முறைப்பாட்டையடுத்து, குற்றப்புலனாய்வு பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, சட்டவிரோதமாக நாவலின் 31 பிரதிகளை அச்சடித்து பல கடைகளுக்கு விற்பனைக்காக வழங்கியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டு அவை கைப்பற்றப்பட்டன.

புலமைச்சொத்து சட்டத்தின் கீழ், சந்தேகநபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய நீதவான், பொலிஸாரை சந்தேக நபரின் கைவிரலடையாளத்தையும்  எடுக்குமாறு பணித்தார்.

முறைப்பாட்டாளரான லலித்த சரத் சந்திர, தனது கணவரின் ஆக்கத்துக்கு விலை நிர்ணயிக்கமுடியாதென்பதால் தனக்கு நட்ட ஈடு தேவையில்லை என்றும் சந்தேகநபருக்கு அதி உச்ச தண்டனை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .