2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

விழிப்புலனற்றவர்களுக்கு நாணயத் தாள்களை அச்சிடவும்: ஜனாதிபதி

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாணயத் தாள்களை அச்சிடும்போது விழிப்புலனற்றவர்கள் அறிந்துகொள்வதற்கு வசதியான அடையாளத்துடன் அச்சிடுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மத்திய வங்கியின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்கினார்.

கடந்த நான்கு வருட காலமாக வெளியிடப்படும் நாணயத்தாள்களில் விழிப்புலன் அற்றவர்கள் அறிந்து கொள்வதற்கான அடையாளம் இல்லாது இருப்பதாகவும் இதனால் தாம் பெரிதும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் விழிப்புலனற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்கவே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

இலங்கையில் முழுமையாக விழிப்புலன் அற்றவர்கள் சுமார் மூன்று இலட்சம் பேர் உள்ளனர். அவர்களது நலனோம்புகை நடவடிக்கைகள் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்கு புதிய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகிறது.

தொழில்வாய்ப்பற்ற விழிப்புலனற்ற பட்டதாரிகளுக்கு தொழில்களைப் பெற்றுக்கொடுத்தல், அங்கவீனமுடையவர்களின் உரிமைகள் தொடர்பான சர்வதேச நியமங்களை இலங்கையில் வினைத்திறன்மிக்க வகையில் நடைமுறைப்படுத்தல், விழிப்புலன் அற்றவர்களது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை புதிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .