2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விவசாய நடவடிக்கைகளுக்கு 73 மில்லியன் ஒதுக்கீடு

Gavitha   / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

2015ஆம் ஆண்டுக்கான விவசாய திணைக்களம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக, வடமாகாண சபையினால்  73 மில்லியன் ரூபாய் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, வடமாகாண விவசாய அமைச்சர் பா.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியிலிருந்து  கொள்வனவு செய்யப்பட்ட விவசாய உள்ளீடுகளை விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை (09), மன்னார் உயிலங்குளம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'வடமாகாண சபையினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 73 மில்லியன் ரூபாய், வடமாகணத்தில் உள்ள 5 மாவட்ட விவசாய திணைக்களங்களுக்கும் பகிரப்பட்டுள்ளது. இதற்கமைவாக, யாழ்.  மாவட்டத்துக்கு 13 மில்லியன் ரூபாயும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு  13.25 மில்லியன் ரூபாயும், வவுனியா மாவட்டத்துக்கு 11.81 மில்லியன் ரூபாயும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 18.22 மில்லியன் ரூபாயும், மன்னார் மாவட்டத்துக்கு 16.72 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்று அவர் கூறினார்.

'மன்னார் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 16.72 மில்லியன் நிதி, 23 திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த 23 திட்டங்களில், 17 திட்டங்கள் விவசாயிகளுக்குரியது. ஏனையவை,  திணைக்களங்களை வழப்படுத்துவதற்கும் திணைக்களங்களின் தேவைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. நேரடியாக 1,062 விவசாயிகள், குறித்த 17 திட்டங்களின் மூலம் பயனடையவுள்ளனர்' என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கு சுமார் 8 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட விவசாய உள்ளீடுகள் 3.3 மில்லியன் ரூபாய் (33 இலட்சம்)  நிதி ஒதுக்கீட்டில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், இவற்றில் எமது பிரதான உணவான நெற்செய்கைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .