2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாவிதன்வெளி கோட்டக்கல்வி பாடசாலைகளுக்கான விஜயம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்,  நாவிதன்வெளி கோட்டக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள  பாடசாலைகளுக்கு நேற்று வெள்ளிக்கிழமை  (09) விஜயம் மேற்கொண்டிருந்தார்.

சவளக்கடை வீரத்திடல் அல்-ஹிதாயா மகாவித்தியாலயத்துக்கு  விஜயம் மேற்கொண்டு பாடசாலையின் பௌதீக நிலையைப் பார்வையிட்டதுடன், பாடசாலையின் குறைபாடுகள், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், பாடசாலையின் நிலைமை தொடர்பாகவும், அதிபர் எம்.எல்.பதுயுத்தீனிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது, பாடசாலை அதிபரினால் சுற்று மதில் மற்றும் நுழைவாயில் என்பன அமைத்து தருமாறு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு துரித தீர்வு பெற்றுத்தருவதாக, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

இதேவேளை, மத்திய முகாம் 12ஆம் கொளனி அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்துக்கு விஜயம் செய்த உறுப்பினர், அங்குள்ள ஆசிரியர் பற்றாக்குறை, பௌதீகவளம், பாடசாலையின் கல்வி வளர்ச்சி, பாடசாலையுடனான பெற்றோர்களின் தொடர்பு போன்ற விடயங்களை, பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம்.யூசுபிடம் கேட்டறிந்ததுடன், பாடசாலையின் பௌதீக வளங்களையும் பார்வையிட்டார்.

பாடசாலையில் பலகாலமாக செயலிழந்து காணப்படும் கட்டடத்தை  பார்வையிட்டதுடன், கட்டடத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .