2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நல்லாட்சி ஒன்று நடைபெற்றிருந்தால் எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியிருக்கமாட்டார்கள்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இந்த நாட்டில் நல்லாட்சி ஒன்று நடந்திருந்தால் எமது மக்கள் போராடவேண்டிய வசியம் ஏற்பட்டிருக்காது. எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியும் இருக்கமாட்டார்கள். அவர்கள் சிறையில் வாடவேண்டிய அவசியமும்  ஏற்பட்டிருக்காது. அப்படி பார்த்தால் ஒரு வகையில் இதற்கு முன்னர் ஆட்சிக்கு வந்த அரசுகளும் குற்றவாளிகள்தான். எம்மையும் எமது இளைஞர்களையும் போராட தூண்டியதே அவர்களின் ஆட்சி அதிகாரங்கள் தான்' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரித்தார்.

இது தொடர்பில் வெள்ளிக்கிழமை (09) அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'பல வருடங்களாக விசாரணைகளின்றி இலங்கையிலுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் குடும்பங்கள் பல இன்னங்களை முகங்கொடுத்து வருகின்றன. இலங்கையில் பொதுமன்னிப்பு என்பது புதிய விடயம் அல்ல. ஏற்கனவே, இலங்கை - இந்திய ஒப்பந்த காலத்தில் பலர் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்டனர். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியை தாக்கியவர் கூட பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்டார்.

அரசியல் கைதிகள் பலர், பல வருடங்களாக் விசாரணைகள் எதுவுமின்றி சிறையில இருக்கின்றார்கள். ஒரு சிலர் குற்றவாளிகளென இனங்காணப்பட்டு தண்டனை பெற்றுள்ளார்கள்;. ஒட்டு மொத்தமாக பார்க்குமிடத்து ஒரு குற்றத்துக்கு எத்தனை வருட தண்டனையோ அதைவிட கூடுதலான வருடங்கள் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்து தற்போது நாட்டில் நடப்பது நல்லாட்சிதான் என்று மக்கள்  எண்ண வேண்டுமானால் இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

எனவே, இதில் யார் குற்றவாளி என்பதல்ல தற்போதுள்ள பிரச்சினை. ஏதோவொரு காரணத்துக்காக தவறாக வழிநடாத்தப்பட்டு இன்று குற்றவாளிகள் என முத்திரை குத்தப்பட்டு சிறையில் வாடுபவர்கள் அத்தனை பேரும் அப்பாவிகள். அதுமட்டுமல்ல தவறாக வழிகாட்டியவர்கள் எல்லாம் இன்று வெளியில் சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து  கொண்டிருக்கும் போது, அவர்களால் வழி நடத்தப்பட்டவர்கள் சிறையில் வாடுவது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. எனவே, அவர்களுக்கு பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்' என குறிப்பிட்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .