சோ.பத்மநாதனிடம் ஒரு நிமிடம்
25-10-2015 05:35 PM
Comments - 0       Views - 251

?         உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
நான் பேர்னாட்ஷோவின் ரசிகன்.  உலகில் மிக முக்கியமான மூவரைச் சொல்லுங்கள் என அவரை ஒரு நிருபர்; கேட்டார். 'முதலாவது சேர்;ச்சில், இரண்டாவது ஸ்டாலின், மூன்றாமவர் பேரைச் சொல்லத் தன்னடக்கம் தடுக்கிறது' என ஷோ கூறினார்.

? நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?

இது எதிர்மறையான கேள்வி.   இளம் வயதில் அரச சேவையில்  - மேலதிகாரிகளோடு முரண்பட்டிருக்கிறேன்.  வயதாக ஆக முரண்படாமல் இணக்கமாக சமூகத்தில் பழகக் கற்றிருக்கிறேன்.

?    இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?

மஹாகவியும் முருகையனும் செய்த „கவிதைச் சமர்... நினைவில் நிற்கிறது.  „மார்க்ஸுன் கல்லறையிலிருந்து ஒரு குரல்... என்று வெங்கட் சாமிநாதன் எழுதியதற்கு எம்.ஏ.நு‡மான் எழுதிய மறுப்புப் பிரசித்தமானது. ஒரு காலத்தில் எங்கள் போர்கள் காணிகளின் எல்லை                     (வேலி)களில் நடந்தன. அந்தப் பயிற்சி இன்று காணி பிடுங்கும் படையினரோடு மோத மக்களுக்கு உதவுகிறது.

?    உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்;கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள்? பெயர் விவரங்களுடன்?

கல்வயல் குமாரசாமி மல்லிகை முகங்களுக்கு எழுதினார்;. கந்தையா ஸ்ரீகணேசன் ஞானத்தில் நீண்டதொரு கட்டுரை எழுதியிருக்கிறார். கோகிலா மகேந்திரன் பல சந்தர்;ப்பங்களில் பேசியும் எழுதியும் உள்ளார். பேராசிரியர்; சிவலிங்கராஜா, அமரர்கள் ஏ.ஜே.கனகரத்தினா, கவிஞர் க.சச்சிதானந்தன், பேராசிரியர் மௌனகுரு, ஓவியர் ஆசை இராசையா,  கவிஞர்கள் ஜெயசீலன், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், இ.சு.முரளீதரன், பா.மகாலிங்கசிவம் என வரிசை நீளும்.

?    நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?

குழந்தை ம.சண்முகலிங்கம், செங்கை ஆழியான், முருகையன், நீலவாணன், சத்தியசீலன் ஆகியோர் படைப்புலகம் பற்றி எழுதியிருக்கிறேன்.

?    யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்?

கி.ராஜநாராயணன், அ.முத்துலிங்கம் இருவரையும் உச்சிமேற்கொள்கிறேன்.

?    இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?

அப்படித் தோன்றியதில்லை.

?    இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
Chinua Achebe இன் „ Things Fall Apar...,  Antoine Saint- Exuperi எழுதிய „குட்டி இளவரசன்... ஆகிய நூல்களை வாசிக்கும்போது அந்த உணர்வு ஏற்பட்டதுண்டு.

?    உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
எனக்குப் பிடித்த சஞ்சிகைகள் அற்பாயுசில் நின்று விடுகின்றன.

?    உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமொரு படைப்புக்கான விலை என்ன?

இந்த நாட்டில் எழுத்துக்கு ஏது பொருளாதார மதிப்பு? „கவிதை காலித்தால் ஊரென்ன காசா கொடுக்கிறது?... என்று பாடினார்; மஹாகவி

?    இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?

ஆங்கிலம், பிரெஞ்ச் போன்ற மொழிகளில் ஒரு படைப்பு வந்தால் நோபல் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.  இந்நிலைமை சரியல்ல.

?    உங்களுக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?

தமிழ், ஆங்கிலம், ஓரளவு சிங்களம், கொஞ்சம் பிரெஞ்ச்.
 

?    முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரனியல் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
Journalism is Literature in a hurry...என்பர். ஊடகங்களில் அவசரம் இருக்கும் அளவுக்கு ஆழம் இல்லை. இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்... படைக்கிறார்கள். புறநடைகள் இருக்கலாம்.   முகநூலின் வருகையோடு நம் எழுத்தாளர்கள் போராளிகளாகிவிட்டார்கள்.

?    உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?

இல்லத்தை நிர்வகிக்கும் மனைவி, வளர்ந்து ஆளாகிவிட்ட மக்கள் நால்வர், கடைக்குட்டி பெண். ஆண்களுள் ஒருவர் மட்டும் இலங்கையில்.

?    எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?

ஓங்கிக் குத்துவதால் கை தான் வலிக்கும்.

"சோ.பத்மநாதனிடம் ஒரு நிமிடம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty