2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐரோப்பிய கிண்ண காற்பந்தாட்ட தெரிவுகாண் தொடர்-முதல் சுற்று

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச.விமல்

ஐரோப்பிய கிண்ண காற்பந்தாட்ட தொடரின் தெரிவுகாண் போட்டிகளின்  முதற்கட்டம் நிறைவடைந்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரின் முதற்கட்டப் போட்டிகள் கடந்த 14 ஆம் திகதி நிறைவுக்கு வந்தன.

இதன் இரண்டாம் கட்டப்போட்டிகள் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளன. இறுதித் தொடர் அடுத்த வருடம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பித்து ஜூலை 10 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. உலகக்கிண்ண தொடருக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய அணிகள் மிகப்பெரிய சர்வதேசத்தொடராக ஐரோப்பிய கிண்ண தொடரையே கருதுகின்றனர். உலகக்கிண்ண தொடருக்கும் இந்த தொடர் நல்லதொரு முன்னோடி தொடராக ஐரோப்பிய அணிகளுக்கு அமைந்துவிடுவதும் வழமை. 

53 அணிகள் இந்த தொடரின் தெரிவுகாண் போட்டிகளில் மோதின. 6 அணிகள் என்ற அடிப்படையில் 8 குழுக்களும், 5 அணிகளுடன் ஒரு  குழுவுமாக அணிகள்  மோதின. சொந்த நாட்டிலும், மற்றைய அணியின் நாட்டிலும் என ஒவ்வொரு அணியும் தமக்கு எதிரான அணியுடன் இரண்டு போட்டிகளில் மோதின. இதன்படி ஒவ்வொரு அணியும் 10 போட்டிகளில் குழு நிலையில் மோதி ஒவ்வொரு குழுக்களில் இருந்தும் இரண்டு அணிகள் நேரடியாக இறுதித் தொடருக்கு தெரிவாகியுள்ளன. குழு I இல் மட்டும் 8 போட்டிகள். 18 அணிகள் தற்போது நேரடியாக தெரிவாகியுள்ளன.  இந்த 18 அணிகளுடன் மூன்றாமிடத்தைப் பெற்ற அணிகளில் சிறந்த அணி 19வது அணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. போட்டிகளை நடாத்தும் பிரான்ஸ் அணி போட்டிகளில் பங்குபற்றவில்லை. அவர்கள் நேரடி அணியாக தெரிவாகியுள்ளனர்.

மிகுதியாகவுள்ள மூன்றாமிடங்களை பெற்ற அணிகள் 8 உம், பிளே ஒப் என அழைக்கப்படும் இரண்டாம் கட்டப்போட்டிகளில் மோதவுள்ளன. இந்த 8 அணிகளும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று நடைபெற்றது போன்றே நடாத்தப்பட்டு இரு குழுக்களில் இருந்தும் 2 அணிகள் என்ற அடிப்படையில் 4 அணிகள் தெரிவாகும்.  27 அணிகள் ஐரோப்பிய கிண்ண தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. 

 

 

குழு A

அணி                போ     வெ              ச          தோ        பெ.கோ எ.கோ    கோ.வி     பு

செக் குடியரசு    10           7              1              2              19           14           5               22

ஐஸ்லாந்து        10           6              2              2              17           6             11             20

துருக்கி               10           5              3              2              14           9              5              18

நெதர்லாந்து       10           4              1              5              17           14           3               13

கஜகஸ்தான்       10           1              2              7              7              18           -11             5

லட்வியா             10           0              5              5              6              19           -13             5

 

 

லட்வியா                     0 - 1                        கஜகஸ்தான்

நெதர்லாந்து                2 - 3                        செக் குடியரசு

துருக்கி                        1 - 0                        ஐஸ்லாந்து

செக் குடியரசு              0 - 2                        துருக்கி

ஐஸ்லாந்து                  2 - 2                        லட்வியா

கஜகஸ்தான்               1 - 2                        நெதர்லாந்து

ஐஸ்லாந்து                  0 - 0                        கஜகஸ்தான்

லட்வியா                      1 - 2                       செக் குடியரசு

துருக்கி                          3 - 0                       நெதர்லாந்து

செக் குடியரசு               2 - 1                        கஜகஸ்தான்

நெதர்லாந்து                 0 - 1                        ஐஸ்லாந்து

துருக்கி                         1 - 1                        லட்வியா

ஐஸ்லாந்து                  2 - 1                        செக் குடியரசு

லட்வியா                       0 - 2                        நெதர்லாந்து

கஜகஸ்தான்              0 - 1                        துருக்கி

நெதர்லாந்து               1 - 1                        துருக்கி

கஜகஸ்தான்               0 - 3                       ஐஸ்லாந்து

செக் குடியரசு             1 - 1                        லட்வியா

செக் குடியரசு             2 - 1                        ஐஸ்லாந்து

துருக்கி                        3 - 1                       கஜகஸ்தான்

நெதர்லாந்து               6 - 0                        லட்வியா

ஐஸ்லாந்து                 2 - 0                        நெதர்லாந்து

லட்வியா                     1 - 1                       துருக்கி

கஜகஸ்தான்              2 - 4                        செக் குடியரசு

லட்வியா                     0 - 3                        ஐஸ்லாந்து

நெதர்லாந்து               3 - 1                        கஜகஸ்தான்

துருக்கி                         1 - 2                        செக் குடியரசு

செக் குடியரசு             2 - 1                        நெதர்லாந்து

ஐஸ்லாந்து                  3 - 0                        துருக்கி

கஜகஸ்தான்                 0 - 0                       லட்வியா

 

இந்தக்குழுவை பொறுத்தளவில் செக் குடியரசு பலமான அணி. 10 போட்டிகளில் 7 வெற்றிகள், 1 சமநிலை முடிவு, 2 தோல்விகள் அடங்கலாக 22 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றனர். இரண்டாமிடத்தை யாரும் எதிர்பார்க்காத ஐஸ்லாந்து அணி கைப்பற்றிக்கொண்டது. முதற் தடவையாக ஐரோப்பியக்கிண்ணத்தொடரின் இறுதி சுற்றுக்குள்  கால் பதித்துள்ளது.  பலமான துருக்கி, நெதர்லாந்து ஆகிய அணிகளை பின் தள்ளியே இந்த வாய்ப்பை பெற்றுள்ளது. 88 ஆம் ஆண்டு சம்பியன் ஆகியது முதல் நெதர்லாந்து அணி ஐரோப்பிய கிண்ணத்தொடருக்கு தகுதி பெறாமல் இருந்தது இல்லை. உலகக்கிண்ண தொடரில் மூன்றாமிடத்தைப்பெற்ற அணி அவர்களது கண்டத்தில் நடைபெறும் தொடரில் வெளியேற்றப்பட்டு இருப்பது மிகப்பெரிய பின்னடைவே. துருக்கி அணி மூன்றாமிடங


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .