இலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை
08-11-2015 09:45 AM
Comments - 0       Views - 548

அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd.

வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprises (SMEs) இலங்கை அரசாங்கத்தின் முழுமொத்த குறிக்கோள்களினுள் முக்கியமானதொரு மூலோபாயத் துறையாக இணக்காணப்பட்டுள்ளதோடு, அனைத்து மக்களையும் உள்ளீர்க்கக்கூடியதான பொருளாதார வளர்ச்சி, பிரதேச அபிவிருத்தி, தொழில் உருவாக்கம் மற்றும் வறுமைத்தணிப்பு ஆகியவற்றுக்கான மாற்றத்தின் இயக்கசக்தியாக கருதப்படுகின்றது. பின்னடைவான பிரதேசங்களை எழுச்சி பெற்று வரும் சுபீட்சமான பிரதேசங்களாக மாற்றுவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் பங்களிப்புச்செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மொத்த தொழில் முயற்சிகளின் எண்ணிக்கையில் 75% ஆகுமென்பதாலும்,தொழில் வாய்ப்புகளில் 45% ஐ வழங்குகின்றமையாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% க்கு பங்களிப்புச் செய்கின்றமையாலும், இலங்கை அரசாங்கம் இதனை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதுகின்றது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் துறையானது விரிந்ததொரு வீச்சிடையினுள் முற்றிலும் நியாயமான அபிவிருத்தி மேம்பாட்டை ஊக்குவிப்பதோடு இது இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்பதற்கு பெண்களுக்கும் இளைஞர், யுவதிகளுக்கும் வாய்ப்பேற்படுத்திக்கொடுக்கின்றது.


உலகமயமாக்கல் போக்கைத் தொடர்ந்து, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் துறையானது, வெறுமனே 'பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்புக்கான' துறையாகவன்றி, அதனைவிட முக்கியமான வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான இயக்க சக்தியாகவே கருதப்படுகின்றது. ஆதலால் தோன்றுகின்ற சவால்களை எதிர்கொள்ளும் பொருட்டு இத்துறையின் தேசிய மற்றும் சர்வதேச போட்டி நிலையை வளர்த்து அதனை விருத்தியடைகின்ற துறையாக அபிவிருத்தி செய்தல் முக்கியமாகும் என இலங்கை அரசு கருதுகின்றது.


இத்துறையின் இயல்பு மற்றும் அது எதிர்நோக்குகின்ற சவால்களைக் கவனத்திற்கொள்கின்ற போது இத்துறை இந்நாட்டின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டு அதனை மேம்படுத்தல் மற்றும் வலுப்படுத்துவதற்கு அரச தலையீட்டில் உதவிப்பொறி முறையோன்றை உருவாக்குதல் முக்கியமாகும். மேற்படி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக்க கொள்கை வரைச்சட்டம் உயர் உள்ளார்ந்த ஆற்றலைக்கொண்ட, எதிர்பார்ப்புக்களை வைத்திருக்கக்கூடியதான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதையும், இன்றைய உலகமயமாக்கலுக்குள்ளான பொருளாதாரத்தினுள் அவை தனது முழுமையான உள்ளார்ந்த ஆற்றலை அடையப்பெறுவதற்கு வாய்ப்பேற்படுத்திக்கொடுப்பதையும் இலக்காகக்கொண்டுள்ளது.மேற்படி கொள்கை வரைச்சட்டமானது சிறியதொழில் முயற்சிகளை நடுத்தர அளவிலானதாகவும், நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை பாரிய அளவிலான தொழில் முயற்சிகளாகவும், பாரிய அளவிலான தொழில் முயற்சிகளை உலகளாவிய ரீதியில் போட்டிகரமான தொழில் முயற்சிகளாகவும் வளர்ச்சியடைவதற்கு உதவி வழங்குகின்றது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் பற்றிய வரைவிலக்கணம்
 
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி என்ற சொல் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும். பல்வேறான நாடுகளும் தமது அபிவிருத்தி மட்டத்தை அடிப்படையாகக்கொண்டு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் பொருட்டு ஒவ்வொன்றும் மாற்றமான வரைவிலக்கணங்களைப் பயன்படுத்துகின்றன. பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற அளவீட்டு அலகாகக் காணப்படுவது மொத்த ஊழியர் எண்ணிக்கை, வருடாந்த மொத்தப்புரள்வு மற்றும் முழுமொத்த முதலீடு என்பனவாகும். இலங்கையின் சூழமைவினுள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் கொள்கை வரைச்சட்டத்தின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு மொத்த ஊழியர் எண்ணிக்கை மற்றும் வருடாந்த மொத்தப் புரள்வை அடிப்படையாக கொண்டு வரைவிலக்கணமளிப்படுகிறது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறையானது 300 க்கு குறைவான ஊழியர் எண்ணிக்கையை சேவையில் ஈடுபடுத்துகின்ற மொத்தப்புரள்வு ரூபாய் 750 மில்லியனைத் தாண்டாத தொழில் முயற்சிகளைக் கொண்டதாகும். இச்சூழமைவினுள், கொள்கை சார்ந்த நடவடிக்கைகள் பற்றியதாயின் நுண்பாக தொழில் முயற்சிகளும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி வகையாக கருதப்படும்.

வரைவிலக்கணத்தைப் பொறுத்தவரை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு வரைவிலக்கணமளிக்கின்ற போது இந்த இரண்டு அளவுகோள்களும் கவனத்திற்கொள்ளப்படும்.ஏதேனுமொரு தொழில் முயற்சி ஒரு வகையவிட பலவற்றில் சேர்கின்ற போது, தொழில் புரிவோர் மட்டுமே தீர்க்கமான காரணியாக அமைதல் வேண்டும். இந்த உயர் எல்லை தனித்தொழில் முயற்சிகளுக்கு மாத்திரமே ஏற்புடையதாக இருக்கும். பாரிய குழுமமொன்றின் பகுதியொன்றாக உள்ள நிறுவனத்தைப் பொறுத்தவரை அந்தக் குழுமத்தின் ஊழியர் எண்ணிக்கை மற்றும் மொத்தப்புரள்வையும் சேர்த்துக்கொள்ளல் அவசியமாகலாம்.

பாரிய கம்பனிகளின் இரண்டாம் நிலைத் தகவுகள் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாகக் கருதப்படுவதில்லை. எவ்வாறாயினும் மேற்கூறப்பட்ட வரையறையினுள் வருகின்ற முழுக் குழுமத்தினதும் மொத்தப் புரள்வு மற்றும் ஊழியர் எண்ணிக்கை என்பன இதில் சேர்க்கப்படமாட்டாது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக்கு வரைவிலக்கணமளிப்பதன் நோக்கம் யாதெனில், கொள்கைகளை இலக்கிடுவதற்கும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் பற்றிய தேசிய புள்ளிவிவரத் தரவுகளை வழங்குவதற்குமான மூலோபாயமொன்றைப் பெற்றுக்கொடுப்பதாகும். இந்த வரைவிலக்கணம் ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒரு தடவை ஆராயப்பட்டு நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்திக்குத் தேவையானவாறு மாற்றப்படும்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் கொள்கையின் குறிக்கோள் 

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் கொள்கை வரைச்சட்டகமானது புதிய சிறிய மற்றும் நடுத்தர அளவலான தொழில் முயற்சிகளுக்கு உதவுவதற்கும். தற்போதுள்ள தொழில் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும், வெற்றிகரமாக நிலைத்திருக்கூடிய உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்ட ஆயினும் கஷ்டமான நிலைமையில் உள்ள அளவிலான தொழில் முயற்சிகளுக்கான சீராக்கல் நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் செயலாற்றுகின்றது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் கொள்கைகள் பின்வரும் துறைகள் தொடர்பில் கவனத்தைச் செலுத்தும்.


உயர் உள்ளார்ந்த ஆற்றலுடன் கூடிய நிலையானதும் பயனுறுதியானதுமான துறைகளை மேம்படுத்தல்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பில் குழுக்களின் அணு முறையின் மீது கவனம் செலுத்தல். குழுக்கள் முறையின் கீழ் உள்ளீடுகளை வழங்குதல் முதல் பதனில் ஊடாக ஏற்றுமதி வரை ஒட்டுமொத்த பெறுமதித் தொடருக்கு உதவியளித்தல் மற்றும் ஊக்குவிப்பளித்தல் நடைபெறும்.
உயர் பெறுமதி சேர்ப்புடன் கூடியதாக தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் உள்நாட்டு மூலப்பொருட்களை (உற்பத்திக்காரணிச் சொத்து என்பதன் காரணத்தினால் அதிக ஒப்பீட்டு அனுகூலத்தை வழங்குவதால் அவற்றை) பயன்படுத்துகின்ற தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல்.

ஏற்றுமதித் திசை முகப்படுத்தப்பட்ட அல்லது ஏற்றுமதிப் பதிலீட்டுத் தொழில் முயற்சிகள் மற்றும் கைத்தொழில்களை ஆர்வமூட்டுதல் மற்றும் ஊக்குவித்தல்.

தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வாய்ப்புகளிள் உருவாகத்திற்கு வசதி ஏற்படுத்தும் பொருட்டு உயர் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்ட வெளிப்பாய்ச்சல் விளைவுகளுடன் கூடிய முக்கியமான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித் துறைகளை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தல்.

நகர-கிராமிய சம நிலையின்மையைக் குறைக்கும் பொருட்டு பின்னடைவான பிரதேசங்களில் கைத்தொழில்களை மேம்படுத்தல் மற்றும் மீளத்தாபித்தல்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் இயல்பை வெறுமனே வர்த்தக, வாணிப அலுவல்கள் மூலமன்றி உயர் பெறுமதியை சேர்த்தல், புத்தாக்கம் மற்றும் தகுந்ந நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதன் அடிப்படையிலான உற்பத்திகள் மற்றும் கைத்தொழில்களின்பால் மாற்றமடையச் செய்தல்.
அனைவரையும் உள்ளடக்குகின்றதான பொருளாதார அபிவிருத்தியை அதிகரிக்கச் செய்யும் பொருட்டும் அதன் மூலம் மிகவும் சிறந்த தொழில் நிலை மற்றும் உயர் வருமானத்துக்கான வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறையை வலுப்படுத்தல்.

இலங்கை பூராவும் பிரதேச ரீதியில் சமநிலையான பொருளாதார வளர்ச்சியை அடையப்பெறுதல்.
 பசுமைத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் வளங்கள் பயன்படுத்தப்படுதலின் வினைத்திறனை மேம்படுத்தல்.

அதேபோன்று சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் கொள்கை வரைச்சட்டகமானது தொழில் முயற்சிக் கிராமம், கைப்பணிக் கைத்தொழில் கிராமம்,தொழில்நுட்ப உற்பத்தி கிராமம் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் கைத்தொழில் பூங்கா, நகரம், பிரதேசத்தை பலப்படுத்துவதன் மூலம் இயற்கை மூலதனம், பசுமை வளர்ச்சி, தொழில் முயற்சியாளர் அபிவிருத்தி, பெண் தொழில் முயற்சியாளர், கலைநுட்பத்துறை மற்றும் பயனுறுதியான கைத்தொழில் குழுக்களைப் பேணிவருதல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தும்.

உயர் உள்ளார்ந்த ஆற்றலுடன் கூடிய பயனுறுதியான குழுக்கள்

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு உதவி வழங்குகின்ற மற்றும் ஊக்குவிக்கின்ற பணியின் பொருட்டு உயர் உள்ளார்ந்த ஆற்றலை எதிர்பார்க்கக்கூடிய குழுக்கள் இனங்காணப்பட்டுள்ளன. பயனுறுதியான குழுக்களைத் தீர்மானிக்கின்ற போது பெறுமதி சேர்த்தல், உள்நாட்டு மூலப்பொருட்களைப் பயன்படுத்தல். முன்னோக்கிய மற்றும் பிந்திய தொடர்புகள், உயர்ந்தளவு வெளிப்பாய்ச்சல் விளைவுகள், தொழில்நுட்ப இயக்க சக்தியுடன் கூடிய உற்பத்திகள் மற்றும் தொழில் உருவாக்க தோற்றப்பாடுகள் ஆகிய அளவுகோள்கள் கவனத்திற் கொள்ளப்படும்.

 

"இலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty