2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கைகோர்க்கும் டயலொக் மற்றும் Ericsson

A.P.Mathan   / 2015 நவம்பர் 12 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

Ericsson (NASDAQ: ERIC) மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகியன இணைந்து, இலங்கையில் Managed Enterprise Cloud சேவைகளை அறிமுகம் செய்துள்ளன. 

Managed Enterprise Cloud மூலமாக சேவை வழங்குநர்களுக்கு white-label நிறுவனசார் மென்பொருள்சார் சேவைகளை நெகிழ்ச்சித்தன்மையுடனும், வினைத்திறன் வாய்ந்த வகையிலும் வடிவமைத்து வழங்கக்கூடியதாக இருக்கும். Managed Enterprise Cloud கட்டமைப்பை பொருத்தமான தரவு நிலையத்தில் நிறுவி அதனை ஒன்றிணைக்கும் செயற்பாடுகளை Ericsson முன்னெடுக்கும். இதனை Ericsson Global சேவை நிலையங்களினூடாக அதன் சொந்த செயற்படுத்துநர் அல்லது சேவை வழங்குநர் மேற்பார்வை செய்து நிர்வகிக்கும். சேவை வழங்குநரின் வாடிக்கையாளர்களுக்கு இந்த பகிரப்பட்ட நிறுவனசார் சேவைகளை பாதுகாப்பான இணைய கட்டமைப்பினூடாக அணுகக்கூடியதாக இருக்கும்.

தனது முதலாவது வாடிக்கையாளரான டயலொக் நிறுவனத்துக்கு, இந்த சேவைகளை Ericsson வழங்கவுள்ளதுடன், பெருமளவான வியாபார அப்ளிகேஷன்களை இலங்கையின் வியாபார ஸ்தாபனங்களுக்கு இதனூடாக கிடைக்கச் செய்யக்கூடியதாக இருக்கும். அறிமுக நிகழ்வில், இந்த அப்ளிகேஷன்கள் தெரிவுகளில் e-mail server, a web client, a content management framework, a customer relationship management system மற்றும் a content management platform போன்றன ஒரு ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் இலகுவாக அணுகக்கூடிய கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருக்கும். Managed Enterprise Cloud உடன் டயலொக் மூலமாக, தனது சகல வியாபாரசார் வாடிக்கையாளர்களுக்கும் சேவைகளை வழங்கக்கூடியதாக இருக்கும், அவர்களின் எந்தவொரு மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன்களையும் ஒன்றிணைத்து ஒரே கட்டமைப்பில் வழங்க முடியும் என்பதுடன், இதன் மூலம் சிக்கனத்தன்மை மேம்படுத்தப்படுவதுடன், சந்தையில் பெருமளவு நேரமும் மீதப்படுத்தப்படும்.

டயலொக் அக்ஸியாடாவின் குழுமத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி திரு. அஸ்வான் கான் இச்சேவை அறிமுகம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், 'அக்ஸியாடா மற்றும் டயலொக்கின் மூலோபாய வியாபார பங்காளராக நாம் Ericsson ஐ பார்க்கிறோம். இந்த உடன்படிக்கை மூலமாக, மற்றுமொரு புத்தாக்க அடிப்படையிலான ஒன்றிணைவு உறுதி செய்யப்பட்டுள்ளது, இதன் மூலமாக தேசத்தின் cloud மற்றும் நிறுவனசார் வியாபார சந்தைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், புத்தாக்கமான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் மூலமாக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்' என்றார்.

Ericsson ஸ்ரீ லங்காவின் இன் பொது முகாமையாளர் டெனிஸ் புருனெட்டி கருத்து தெரிவிக்கையில், 'இந்த புத்தாக்கமான cloud பங்காண்மை அறிமுகத்தின் மூலமாக டயலொக்கின் நிறுவனசார் வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு அனுகூலம் சேர்க்கப்படும். அத்துடன், புத்தாக்கத்தை முன்னெடுத்துச் செல்வது எனும் அந்நிறுவனத்தின் எதிர்பார்ப்பு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மேலதிக வியாபாரப் பெறுமதிகளை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். டயலொக் உடன் கைகோர்த்து இந்த cloud சேவைகளை அறிமுகம் செய்ய நாம் தீர்மானித்ததன் மூலம், முகாமைத்துவ சேவைகளில் தொழில்நுட்ப தலைமைத்துவம் மற்றும் சிந்தனை ஆகியன மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளன' என்றார்.

Managed Enterprise Cloud என்பது, சேவை வழங்குநர்களுக்கு துரித கதியில் cloud வியாபார உடழரன வழங்கல்களை உருவாக்கி, சேவை ஒன்றாக விற்பனை செய்யக்கூடிய வகையிலமைந்த முறைக்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. ஏனைய உதாரணங்களில் Enterprise Mobility Management, Cloud based Push-to-Talk kw;Wk; Virtual Enterprise Gateway மற்றும் ஏசைவரயட நுவெநசிசளைந புயவநறயல போன்றன அடங்கியுள்ளன. 

இந்நாட்டின் பிரதான தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் நிறுவனம் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்காக, அழைப்பு மற்றும் தரவு இணைப்புகள் சர்வதேச மற்றும் டிஜிட்டல் தொழிநுட்ப சேவை ஆகியவற்றை பரந்தளவில் வியாபித்துள்ள வியாபார தீர்வுகளுடன் வழங்குவதோடு டிஜிட்டல் உட்கட்டமைப்பு (Infrastructure as a service)  மென்பொருள் சேவை போன்றவற்றை இந்நாட்டின் வியாபாரத்திற்காக வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் அதன் 3 மத்திய நிலையங்களினூடாக டயலொக் வழங்கும் iDC சேவையும்; முன்னணி வகிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .