2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கண்டியில் எம்பார்க்கின் மூன்றாவது காட்சியகம்

A.P.Mathan   / 2015 நவம்பர் 12 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

உன்னதமான நோக்கத்திற்காக செயற்பட்டு வரும் நவநாகரிக எம்பார்க் வர்த்தக முத்திரை உற்பத்திகளின் மூன்றாவது காட்சியகம் பல் இனங்கள் இணைந்து வாழும் கண்டி மாநகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

கண்டி நகர மத்திய நிலையத்தில் (KCC) இல. 30ல் மூன்றாம் மாடியில் இந்த நிலையம் அமைந்துள்ளது. காலிக் கோட்டையில் அமைந்துள்ள எம்பார்க் நிலையத்தை பிரதிபலிக்கும் வகையில் மிகக் குறுகிய இடத்தில் இந்தக் காட்சியகம் அமையப் பெற்றுள்ளது. புதிய வகை வர்த்தக முத்திரைகளுடன் கூடிய விரிவான பல ஆடைத் தெரிவுகள், பாதணிகள், ஆண்கள் ,சிறுவர் மற்றும் பெண்களுக்கான உதிரிப் பொருட்கள் உட்பட பல்வகைத் தெரிவுகளை இங்கு பெற முடியும். ஒடாரா குணவர்தனவின் வழிகாட்டுதலின் கீழ் முழு அளவிலான நவநாகரிக வர்த்தக முத்திரையாக தன்னை பிரதானப்படுத்திக் கொள்ள எம்பார்க் உறுதி பூண்டுள்ளது. தனிநபர்கள் நாகரீகமாக இருப்பதோடு ஒரு உன்னத நோக்கத்திற்காக தங்களை அர்ப்பணிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற வகையில் இது செயற்படத் தொடங்கியுள்ளது. 

எம்பார்க் ஸ்தாபகர் ஒடாராவின் மூன்று வளர்ப்பு செல்லப்பிராணிகளான நிகோ, பென்டிட் மற்றும் ரோஸி ஆகிய நாய்களின் ஆதிக்கத்தையும் பிரத்தியேகத் தன்மையையும் வலியுறுத்தும் வகையில் இந்தக் காட்சியகத்தின் அலங்காரங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஏம்பாரக்கின் பிரபலமான பல ஆடைகள் மற்றும் அணிகலன்களின் தொகுப்பில் இவற்றின் தாக்கத்தை பரவலாக உணரலாம். 

எம்பார்க் இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் தனது முதலாவது காட்சியகத்தை காலியில் திறந்து வைத்ததன் மூலம் சுதந்திரமான சில்லறை வர்த்தகத்திற்குள் பிரவேசித்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது காட்சியகம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிச் செல்லல் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. எம்பார்க் உற்பத்திகளை அலெக்ஸாண்ட்ரா பிளேஸில் உள்ள ஒடெல் காட்சியகம் மற்றும் ஜா எலயில் உள்ள ஒடெல் K Zone காட்சியகத்திலும் பெற்றுக் கௌ;ள முடியும். 

இந்த பொருள்களின் விற்பனை மூலம் எம்பார்க் வீதி நாய்கள் தொடர்பான பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .