2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விளையாட்டு மைதானங்களை புனரமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 13 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்ட விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுமென விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நேற்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது திருகோணமலை மெக்கெய்ஷர் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி வேலைகளை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர். இந்நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'திருகோணமலை மாவட்டத்தின் விளையாட்டு அபிவிருத்திற்காக மாவட்டத்தின் பல பிரதேசங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கு இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய நடவடிக்கைகள் மேற்கௌ;ளப்படவுள்ளது. அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மெக்கெய்ஷர் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இம்மைதானத்தின் வேலைகள் மேற்கொள்ளும்போது ஒரு பகுதியில் மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வேலைகளை உடன் ஆரம்பிப்பதற்கு சட்டத்துறையினரினதும், பொலிஸாரினதும் அறிக்கைகளை எமது பணிப்பாளர் கோரியுள்ளார். அது கிடைக்கப் பெற்றவுடன் அதன் வேலைகள் ஆரம்பிக்கப்படும். இம்மைதானத்தின் ஏனைய அபிவிருத்தி வேலைகளான நீச்சல் தடாகம், உள்ளக அரங்குகளின் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவ்வேலைகள் இவ்வருட டிசெம்பருக்குள் முடிக்கப்பட்டு அடுத்து வரும் ஜனவரி மாதமளவில் திறந்து வைக்கவுள்ளோம்.

இம்மைதானம் கிழக்கு மாகாண விளையாட்டு வீரர்களுக்கு வரப்பிரசாரமாக அமையவுள்ளதுடன் சிறந்த விளையாட்டு வீரர்களையும் எதிர்காலத்தில் எமது மாகாணத்திலிருந்தும் உருவாக்க முடியும்' என நம்பிக்கை தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X