2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சீன ஜோடியின் கைப்பை திருட்டு: நபருக்கு கடூழிய சிறை

Kogilavani   / 2015 நவம்பர் 19 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ...

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த சீன தம்பதியின் கைப்பையை திருடிய நபருக்கு,  ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் பிரசாத் லியனகே ஒரு வருட கடூழிய சிறை தண்டனையும் 1,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

கடந்த மாதம் 28 ஆம் திகதி சீனாவை சேர்ந்த பெண்ணொருவரும் அவரது கணவரும்  இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்தனர். மேற்படி ஜோடி கடந்த 2ஆம் திகதி,   பேராதனையிலிருந்து  நானுஓயாவுக்கு உடரட்டமெனிக்கே புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது, ஹட்டன்- ரொசல்ல புகையிரத நிலையத்துக்கு அருகில் வைத்து நபரொருவர் மேற்படி பெண் வைத்திருந்த கைப்பையை பறித்துச் சென்றுள்ளார்.

அப்பையில் பணம் மற்றும் பெறுமதியான அலைபேசி ஆகியன இருந்துள்ளன. குறித்த ஜோடி இது குறித்து ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யதனர்.

இதனையடுத்து அப்பெண் தனது மற்றைய கையடக்கத்தொலைபேசியின் ஊடாக,  ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் காணாமல் போன கையடக்கத்தொலைபேசி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டதாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விரைந்து செயற்பட்ட ஹட்டன் பொலிஸார் ஜீ.பி.எஸ் (புPளு) தொழில்நுட்ப உதவியுடன், சந்தேகநபரை கொழும்பு கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் வைத்து  கைது செய்ததுடன் கைப்பையையும் கைப்பற்றினர்.

கைதானவர் போதைக்கு அடிமையானவர் எனவும் அவர் கண்டி அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கைப்பையில் அமெரிக்க டொலர், சீன நாணயம் உள்ளடங்களாக ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும்  நவீன ரக அலைப்பேசியும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் கைப்பையிலிருந்த இலங்கை ரூபாய் மூவாயிரத்தை சந்தேகநபர் செலவுசெய்திருந்தார். சந்தேக நபரை 4ஆம் திகதி  ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து  வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சீனத் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டதோடு, பொலிஸாரின் செயற்பாட்டை சீன ஜோடி பாராட்டியுமுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .