நாளைய விடியல் நமக்காக காத்திருக்கு
21-11-2015 10:47 AM
Comments - 0       Views - 328

ஓயாமல் கொக்கரிக்கும் ஒவ்வாம்மை கூட்டம்
பாயாமல் எச்சரிக்கும் இலட்சியப் தமிழினம்
சாயாமல் சுட்டெரிக்கும் வீறு கொண்ட உயிர்பயணம்
காயாமல் இருக்கும் சுயகாப்பு போராட்டதில்
காவியம் படைக்காமல் மாண்டுவிடுமோ இந்த இனம்

காயங்கள் பட்டும் தாகங்கள் தீரவில்லை
இரத்தங்கள் இன்னும் பூமியில் காயவில்லை
எம்மீது வீசப்படும் பாறைகளும் ஏற்போம்
உளியாக நின்று சிற்பங்கள் வடிப்போம்

தோல்விகளை எல்லாம் புன்னகையுடன் ஏற்போம்
வேள்விகள் செய்வோம் இதயத்தை வைரமாக்குவோம்
சுடு தீயில் பாதங்கள் புதைத்தேனும்
கடுகதியில் சுதந்திர பூமியை தேடி நிற்போம்

கறுவிழிகளில் சிவப்பு தீபங்கள் ஏந்தியேனும்
இருள்தேசங்கள் ஒளிபெற ஒற்றுமைகள் காண்போம்
சரித்திரங்கள் சமைக்க சத்தியத்துடன் அடியெடுப்போம்
நாளைய விடியல் நமக்காக காத்திருக்கு
அதுவரை நாமும் விழித்திருப்போம்.

                                 திருக்கோவில்-எஸ்.கார்த்திகேசு

 

"நாளைய விடியல் நமக்காக காத்திருக்கு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty