2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரலாற்றின் இன்று: நவம்பர் 23

Kogilavani   / 2015 நவம்பர் 23 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

1940 - இரண்டாம் உலகப் போர்: ருமேனியா அச்சு அணி நாடுகளுடன் இணைந்தது.

1955 - கொக்கோஸ் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு கைமாறியது.

1971 - மக்கள் சீனக் குடியரசின் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

1978 - இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சூறாவளி தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

1979 - மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தொமஸ் மக்மாகன் என்பவருக்கு டப்ளினில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

1980 - தெற்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 4,800 பேர் பலியாகினர்.

1985 - எகிப்திய பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட போது எகிப்தியப் படைகள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

1996 - எதியோப்பிய விமானம் கடத்தப்பட்டு எரிபொருள் முடிந்த நிலையில் இந்து மாகடலில் கொமொரோஸ் அருகில் வீழ்ந்ததில் 123 பேர் பலியாகினர்.

1998 - கம்போடியத் தலைவர் ஹன் சென்னுக்கும் இளவரசர் நொரொடோம் ரனாரிட்டுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

2003 - வாரக்கணக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஜோர்ஜிய அதிபர் எடுவார்ட் ஷெவர்நாட்செ பதவி விலகினார்.

2005 - லைபீரியாவின் தலைவராக எலன் ஜான்சன் சர்லீஃப் தெரிவு செய்யப்பட்டார். ஆபிரிக்க நாடொன்றிண் முதலாவது பெண் தலைவர் இவராவார்.

2007 - அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது

2007 - ஆர்ஜெண்டீனாவுக்குத் தெற்கோ பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 154 பெர் கொல்லப்பட்டன


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .