நீதான்
23-11-2015 10:29 AM
Comments - 0       Views - 49

நீதான் நம் உறவை முறித்து வீசினாய் ஒரு விறகு மாதிரி. நானென்ன செய்ய, குரங்குகள் இப்படித்தான், பூமாலைகளைப் பிய்த்துத்தான் வீசும்.
இதற்குப் பிறகும் நான் உன்னை எனது மாளிகையில் கூட்டிவைத்திருத்தல் நியாயமில்லை. எழும்பு, ஓடிப்போ, எங்காவது சாக்கடையைப் பார்த்துச் சீவி.
இந்த மாளிகைக்குள் உன்னை வளர்த்ததைவிட, ஒரு புறாவை வளர்த்திருந்தாலும், குறைந்தது ஓர் இறகையாவது எனக்கு உதிர்த்தித் தன் அன்பைத் தெரிவித்து என்னைப் பூரிப்படையச் செய்திருக்கும்.
புறா இறகு தூக்கிப் பார்க்க இதம்.
நீ எப்படி என்னை ஏமாற்றியிருக்கிறாய், உன் நெஞ்சில் ஒரு ரொட்டிக் கல்லைச் சூடேற்றிவைத்துக் கொண்டு எனது அன்பை அதில் தட்டி, பிசையாமலே அதை உயிரோடு போட்டு சுட்டிருக்கிறாய், மலரால் ஒரு மாவு ரொட்டி முறுகி நாற்றம் வரத்தான் முறித்தாய், எனக்கு விளங்கிவிடப் போகிறதென்று.
அன்பரே, விளையாடி இருக்கிறீர்கள் என்னோடு நீங்கள் வீரன் என நினைத்துக் கொண்டு. என்னை உங்கள் சப்பாத்துக்களாகவே கவனித்திருக்கிறீர்கள்.
நான் நீங்கள் கழற்றி எறிந்த சப்பாத்து. உங்கள் காலுக்குக் கிடந்த பாவத்தை அழிக்க ஆயிரம் தடவைகள் பாயவேண்டும் என்னில் நான் ஒரு புண்ணிய நதியாய்.

சோலைக்கிளி

"நீதான்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty