2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெள்ளைக் காண்டா மிருகம் மரணம்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 23 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் அரிய வகைக் காண்டா மிருகங்களில் ஒன்றான வடக்கு வெள்ளையினக் காண்டாமிருகமொன்று, அமெரிக்காவில் மரணமடைந்துள்ளது.

இவ்வினத்தில், இன்னமும் மூன்றே மூன்று காண்டா மிருகங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன.

கலிபோர்னியாவின் சான் டியாகோவில் உள்ள பூங்காவொன்றிலேயே, இந்தக் காண்டா மிருகம் உயிரிழந்துள்ளது.

41 வயதான, நோலா என்ற இந்தப் பெண் காண்டா மிருகம், 1989ஆம் ஆண்டில், அந்தப் பூங்காவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிலிருந்து, அங்கேயே வசித்து வந்துள்ளது.

1,800 கிலோ கிராம் எடையுள்ள அந்தக் காண்டா மிருகம், அண்மைக்காலமாக, தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பின் காணப்பட்டிருந்தது. எனினும், அதன் உடல்நிலை மோசமடைந்து, தற்போது உயிரிழந்துள்ளது.

அவற்றின் தந்தங்களுக்காகக் கொல்லப்படுவதன் காரணமாக, வட வெள்ளையின காண்டா மிருகங்கள், காடுகளில் அழிந்துள்ளதாக 2008ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாத்திரம், பூங்காக்களில் பாதுகாப்பாகக் காணப்பட்டன. இதில், நோலா உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய மூன்றும், கென்யாவிலுள்ள சரணலாயமொன்றில் காணப்படுகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .