2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: நவம்பர் 24

Kogilavani   / 2015 நவம்பர் 24 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

1639 - ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.

1642 - ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாஸ்மானியா எனப் பெயர் பெற்றது.

1859 - சார்ல்ஸ் டார்வின் உயிரங்களின் தோற்றம் நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின.

1914 - முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.

1917 - விஸ்கொன்சின் மாநிலத் தலைநகர் மில்வாக்கியில் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

1922 - துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஐரியக் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ரொபேர்ட் ஏர்ஸ்கின் சைல்டேர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1940 - இரண்டாம் உலகப் போர்: சிலோவாக்கியா அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தது.

1992 - மக்கள் சீனக் குடியரசில் சீன விமானம் ஒன்று வீழ்ந்ததில் 141 பேர் கொல்லப்பட்டனர்.

2002 - ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் டில்லியில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .