2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதில் சங்கடம்

Sudharshini   / 2015 நவம்பர் 25 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

'வரவு-செலவுத் திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்;ள போதும் மலையகத்தில் உள்ள பெரும்பாலான வர்த்தக  நிலையங்களில்  பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை' என நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மஸ்கெலியா நகர பகுதியிலுள்ள சில வியாபார நிலையங்களில் விலை குறைக்கப்பட்ட பொருட்கள், பழைய விலைகளுக்கே விற்கப்படுவதாகவும் நுகர்வோர் சுட்டிக்காட்டினர்.

ஆனால், பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டால் மட்டும். அந்த அதிகரிப்பை உடன் அமுலுக்கு வரும்வகையில் வர்த்தகர்கள் அதிகரித்து கொள்கின்றனர் என்றும் அம்மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இதுதொடர்பில்  நுவரெலியா நுகர்வோர் அதிகார சபையின் கவனத்துக்கு தான் கொண்டுவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .