2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

முழு அங்கத்துவ நாடுகளுக்கு தலா 10 மில். டொலர்கள்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 25 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் முழு அங்கத்துவ நாடுகளில் ஏழு நாடுகளுக்கு, அடுத்த எட்டு வருடங்களில் தலா 10 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஆகியன தவிர்ந்த ஏனைய 7 நாடுகளுக்கே, இவ்வாறு பணம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

அடுத்தாண்டு ஜனவரி முதல், இந்தப் பணம் பகிர்ந்தளிப்பு ஆரம்பிக்கப்படுமெனவும், வருடந்தோறும், தலா 1.25 மில்லியன் டொலர்களை அந்நாடுகள் பெறுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட் நிதியத்தின் கீழேயே, இப்பணம் வழங்கப்படவுள்ளது. எனினும், கடந்தாண்டு இத்தொகை, 12.5 மில்லியன் அமெரிக்க டொலர்களென, சர்வதெச கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுச் செயற்குழு உறுப்பினரும் இங்கிலாந்து கிரிக்கெட் சபைத் தலைவருமான கைல்ஸ் கிளார்க்கினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மூன்றும், ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் வருமானத்தில் குறிப்பிட்டளவு பங்கைப் பெறுமென்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .