2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சிங்கப்பூர் நிகழ்வில் பங்கேற்ற 36 முன்னணி டயர் விநியோகஸ்தர்கள்

A.P.Mathan   / 2015 நவம்பர் 27 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி வாயு மூலமான டயர் உற்பத்தியாளர்களான சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் அதன் பிரதான டயர் விநியோகஸ்தர்களை நான்கு நாள் பயணமாக அண்மையில் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றது. வர்த்தக வெற்றியின் கொண்டாட்டம் இதன் மூலம் ஒர் புதிய மட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதையும் சேர்ந்த 136 டயர் விநியோகஸ்தர்கள் சிங்கப்பூர் ஹொலிடே இன்னில் இடம்பெற்ற கண்கவர் விருது வழங்கும் விழாவிலும் பங்கேற்றனர். இங்கு அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு 2014-15ல் இலங்கையில் சியெட் வளர்ச்சிக்காக அளித்த பங்களிப்பிற்கான வெகுமதிகளும் வழங்கப்பட்டன.

'ஒன்றுபட்டு வெல்வோம்' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வு பிரதான அம்சமாக இடம்பெற்றது அதற்கப்பால் சிங்கப்பூரை சுற்றிப்பார்த்தல், பொருள் கொள்வனவு, யுனிவர்ஸல் ஸ்டுடியோ மற்றும் மெழுகு நூதனசாலை என்பனவற்றுக்கான விஜயம் என்பனவும் இதில் இடம்பெற்றன.

இந்த கண்கவர் நிகழ்வில் உரையாற்றிய சியெட் களனியின் தலைவர் சானக்க டி சில்வா கடந்த நிதிஆண்டில் கம்பனி 10 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை 7.6 பில்லியன்களாகவும் வெளிநாட்டு விற்பனை 2.4 பில்லியன்களாகவும் உள்ளது என்றார். 'எமது எற்றுமதிகள் மூலம் புதிய சந்தை புதிய நாடுகள் என்பனவற்றில் நாம் நுழைந்துள்ளோம். உள்ளுர் சந்தையில் நாம் எமது ரேடியல் டயர் உற்பத்தி ஆற்றலை அதிகரித்துள்ளோம். பரப்பு மற்றும் டயர் அளவு என்பனவற்றை நாம் விரிவாக்கியுள்ளோம்' என்றார்.

டயர் உலகின் எதிர்காலம் ரேடியல் டயராக உள்ளது. முதலீட்டு ரீதியாகவும் கவனம் செலுத்தப்படும் பிரிவாக அது உள்ளது. உள்ளுர் சந்தைப் பிரிவில் 30 வீத பங்கைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தும் வகையில் சியெட் ரேடியல் டயர் பிரிவை உயர்த்தியமைக்காக டி சில்வா விநியோகஸ்தர்களுக்கு நன்றி கூறினார். 'இந்தப் பிரிவில் இப்போது எம்மிடம் 32 அளவுகள் உள்ளன. இவை பயணிகள் கார்கள், பயன்பாட்டு வாகனங்கள் விளையாட்டுப் பிரிவு வாகனங்கள் என பல பிரிவுகளை உள்ளடக்கி உள்ளளன. அடுத்த சில மாதங்களில் மேலும் பல அளவுகள் வரவுள்ளன' என்றார்.

மோட்டார் சைக்கிள் டயர் பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ள விரிவாக்கத் திட்டம் பற்றியும் அவர் விநியோகஸ்தர்களுக்கு விளக்கினார். 'இது சம்பந்தமாக இரண்டு உற்பத்திப் பிரிவுகளில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளளன. இவை 31000 டயர்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டவை. முதல் கட்டமாக 14000 டயர்கள் உற்பத்தி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புதிய GRIPPவகை டயர்களை எமது சந்தைக்கு வழங்க முடியும்'என்றார்.

சியெட் களளி முகாமைத்துவப் பணிப்பாளர் விஜய் காம்பீர் பேசுகையில் ரேடியல், மோட்டார் மற்றும் முச்சக்கர வண்டிப் பிரிவில் மூன்று நட்சத்திர வகை வளர்ச்சியிலேயே கம்பனி அதிக கவனம் செலுத்துகின்றது என்றார். விரிவான சேவையை வழங்குவதற்கான ஆதரவு சேவை, உற்பத்தி தர முன்னேற்றம், சியெட் இந்தியாவின் அனுபவத்தையும் ஸ்திரப்பாட்டையும் பகிர்ந்து கொள்ளல் என்பன பற்றியும் அவர் குறிப்பிட்டார். மாறிவரும் சந்தைத் தேவைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே புதிய உற்பத்திகள் அமைய வேண்டும். அவற்றை விநியோகஸ்தர்கள் அதிகம் விற்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். கம்பனியின் திகில் மிக்க அனுபவத்தில் மோட்டார் சைக்கிள் டயர் உற்பத்திப் பிரிவும் அடங்கியுள்ளது. விரைவில் விநியோகஸ்தர்கள் இவற்றை எதிர்ப்பார்க்கலாம் என்றார்.

2014-15ல் விருதுகளுக்கு மேலதிகமாக வெளிநாட்டு விஜயம் உட்பட இன்னும் பல வெகுமதிகளை வென்ற விநியோகஸ்தர்கள் விவரம் : நந்தா டயர் ஹவுஸ் வவுனியா, சுமித் மார்கடிங் கம்பனி அம்பலாங்கொட, யூ அன்ட் எச் வீல் சேர்விஸ் கொழும்பு-02, த டயர் டீம் நுகேகொடை, சுமிடேக் டயர் கம்பனி குருணாகல், எம்.ஜே.ஆர் பீரிஸ் அன்ட் சன்ஸ் கண்டி, பெரமவுண்ட் டயர் டிரேடர்ஸ் கொழும்பு 14, ஸ்மார்ட் வீல்ஸ் கொழும்பு 02, ஷாந்தி டயர் மார்ட் திக்வெல்ல, அநுர டயர் சேர்விஸ் நிவித்திகல.
சியெட் டயர் ஹோல்டிங்ஸ் தற்போது இலங்கையின் டயர் தேவையில் அரைவாசியை உற்பத்தி செய்கின்றது. தற்போது இந்தியாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சியெட் உலகளாவிய ரீதியில் 110 நாடுகளில் நிலைகொண்டுள்ள ஒரு வர்த்தக முத்திரையாகும். 1924ம் ஆண்டு காலப்பகுதியில் இத்தாலியில் தோற்றம் பெற்ற Cavi Electrici Affini Torino, அல்லது Electrical Cables & Allied Products of Turin, என்பதன் சுருக்க வடிவமாக உள்ளது.

2010, 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் சிறந்த வர்த்தக செயற்பாட்டுக்காக தேசிய விருதை வென்றுள்ள சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் 2013ல் பாரிய அளவிலான உற்பத்திப் பிரிவில் தேசிய தர விருதையும் வென்றுள்ளது. சியெட் களனி ஹோல்டிங்ஸ் இந்தியாவின் RPG குழுமத்துக்கும் களனி டயர் நிறுவனத்துக்கும் இடையிலான ஒரு வெற்றிகரமான கூட்டு முயற்சியாகும். இலங்கையில் மூன்று உற்பத்தி நிலையங்களைக் கொண்டுள்ள இங்கு சுமார் ஆயிரம் பேர் கொண்ட ஊழியர் படை அணியொன்றும் தொழில்புரிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .