2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மேச்சல் நிலத்துக்கு 500 ஏக்கர் நிலத்தை வழங்க கோரிக்கை

Kogilavani   / 2015 நவம்பர் 27 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மார்க் ஆனந்த்
 
தேசிய  உணவு உற்பத்தி மற்றும் அதன் பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம், மன்னார் மாவட்ட செயலகத்தில் அதன் செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய தலைமையில்  வியாழக்கிழமை(26) நடைபெற்றது.

மன்னார்; மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர்; பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய செய்கை, தோட்டங்கள், கால்நடை வளர்;ப்பு போன்றவற்றின் உற்பத்திகளை தரப்படுத்தி அதிகரிக்க செய்தல் மற்றும் அதனை பாதுகாப்பது தொடர்;பாக இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது கால்நடைகளை மேச்சலுக்கு விடுவதற்கு மேச்சல் தளம் இன்மை தொடர்;பாக தெரிவிக்கப்பட்டதுடன் இதுதொடர்பாக வனவள திணைக்களம் 500 ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு ஆவண செய்யும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.  
 
பண்டிவிரிச்சான் பகுதியில் கிராமத்தில் 80 சதவீதமான பயிர்செய்கை காணிகள் செய்கை பண்ணப்படாமல் காடு வளர்ந்து காணப்படுவதால் அங்கு டெங்கு அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டியதுடன் அதன் உரிமையாளர்கள் அதனை துப்புரவு செய்து அப்பகுதியில் விவசாய செய்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்; என தெரிவிக்கப்பட்டது.
 
மேலும் விவசாயிகளின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு போக்குவரத்து வசதிகளை வழங்குதல் மற்றும் மன்னாரில் விவசாயிகளின் உற்பத்திகளை விற்பணை செய்வதற்கு பொது சந்தை இன்மையால் ஏற்படும் பாதகங்கள் மற்றும் அதற்கான இடத்தை தெரிவுசெய்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
 
மல்வத்ஓயாவின் நீரினை சேகரிக்க திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் வருடம் முழுவதும் பயிர்செய்கைக்கு தேவையான நீரினை பெற்றுகொள்ளமுடியும் என விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

குறித்த விடயம் தொடரபாக ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன் அது தொடர்பாக ஆராயப்பட்டது.

இதேவேளை முட்டை உற்பத்தியை 15 வீதத்தால் அதிகரிக்கவும் அதேபோன்று பால் உற்பத்தியை 20 வீதத்தால் அதிகரிக்கவும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இக்கூட்டத்தில் மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டி மெல், வட மாகாண சபையின் உறுப்பினர் ஞானசீலன் குணசீலன், 5 பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .