2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'முஸ்லிம்கள் பேரம் பேசி தேவையானதை பெறுகின்றனர்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 27 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும்போது, தங்களுக்கு தேவையானவற்றை பேரம் பேசிப் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், நாங்கள் அரசாங்கத்திடம் எவ்வித பேரம் பேசலையும் செய்யவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், மாவட்;டம் அமைந்துள்ள மாகாண முதலமைச்சர் மற்றும் மாவட்டத்தில் அதிக வாக்குப் பெற்ற கட்சியின் பிரதிநிதி ஆகியோர் இணைத் தலைவர்களாக இருப்பார்கள் என அரசாங்கத்தால் கூறப்பட்டது. ஆனால், மன்னார் மாவட்டத்தில் அவ்வாறானதொரு முறையில்லாமல் இணைத் தலைவராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இருக்கின்றார். இது தொடர்பில் முதலமைச்சரிடம் வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 'இது ஒரு அரசியல் ரீதியான செயற்பாடு. அரசாங்கத்துடன் மேற்கொண்ட பேரம்பேசலில் அவர்கள் அதனைப் பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் வாக்களிக்க முன்னரே பேரம் பேசலை மேற்கொண்டனர்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .