2024 மார்ச் 28, வியாழக்கிழமை

குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 29 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீமுருகன் கோவில் வீதியில் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபையால் குப்பைகள் கொட்டப்படுவதற்கு அப்பிரதேச மக்கள்; சனிக்கிழமை (28)  எதிர்ப்புத் தெரிவித்து, குப்பைகளைக் கொட்டவிடாமல்  தடுத்துள்ளனர்.

மேற்படி கோவில் வீதியில் மக்களின் குடியிருப்புகளுக்கு அருகில் கடந்த 03 வருடங்களுக்கும் மேலாக மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபையால் சேகரிக்கப்படுகின்ற குப்பைகளை அப்பிரதேச சபை கொட்டியது. இதனால், அப்பிரதேசத்திலுள்ள மக்கள் சுகாதாரச்  சீர்கேடுகளை எதிர்கொண்டுள்ளதாக அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இங்கு குப்பைகள் கொட்டுவதை நிறுத்துமாறு கோரி மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபைச் செயலாளர் வசந்தகுமாரன் யாகேஸ்வரியிடம் களுதாவளை பொது அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த வியாழக்கிழமை (26)  கடிதத்தை கையளித்திருந்தனர்.

இதையும் பொருட்படுத்தாது பிரதேச சபை ஊழியர்கள் அங்கு குப்பைகளைக் கொட்டுவதற்கு வந்தபோதே, குப்பைகளைக் கொட்டவிடாமல் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து தடுத்துள்ளனர்.
இதன்போது, குப்பைகளை கொண்டுவந்த பிரதேச சபை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையில்; வாக்குவாதம் இடம்பெற்றது. இந்நிலையில், பிரதேச சபைச் செயலாளர் வசந்தகுமாரன் யாகேஸ்வரியிடம் களுதாவளை நியூபவர் இளைஞர் கழக ஆலோசகர் மனோகரன் மதன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இது தொடர்பில் கேட்டபோது, சனிக்கிழமை (28) வரை குப்பைகளைக் கொட்டுவதற்கு அனுமதிக்குமாறும் இனிமேல், அவ்விடத்தில் குப்பைகள் கொட்டப்படமாட்டாதென்றும்  உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையைக் கைவிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X