2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

புகையிரதக் கடவைக்கு பாதுகாப்பு அமைக்குமாறு கோரிக்கை

Gavitha   / 2015 நவம்பர் 30 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாணத்தில் உள்ள புகையிரதக் கடவைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா மற்றும் புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார்.  

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி புகையிரதப் பாதை மீள அமைக்கப்பட்டபோது, பல தவறுகள் இடம்பெற்றிருந்தன. இதனை அறிந்து, அப்போதைய போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடி அவ்வப்போது பல திருத்தங்களை தான் மேற்கொண்டிருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'குறிப்பாக, புகையிரதக் கடவைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், குறுக்கு வீதிகளுக்கான புகையிரதக் கடவைகள் மற்றும் புகையிரதப் பாதை அதிகளவில் உயர்த்தப்பட்டமை காரணமாக, அண்டிய குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இதனால் புகையிரதக் கடவைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட பல தேவைகள் கைவிடப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக நிறைவேற்ற உடனடி நடவடிக்கைகள் தேவை.' என்று அவர் கோரியுள்ளார்.

குறிப்பாக, புகையிரதக் கடவைகளின் புhதுகாப்பின்மை காரணமாக நாளுக்கு நாள் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருவதாகவும் எனவே இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தான் கோரியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .